நவீன சூழலியலின் தந்தை - ஜி எவ்லின் ஹட்சின்சன்

 









ஜி எவ்லின் ஹட்சின்சன் (G.Evelyn hutchinson
1903 -1991)

உயிரியலாளர், ஆசிரியர்

நவீன சூழலியலின் தந்தை என்று என்னை அழைக்கிறார்கள். 

எனது மாணவர்கள் தான் சூழலில் உள்ள உயிரினங்களை கணிக்கும் கணிதமாதிரியை உருவாக்கினார்கள். 

இங்கிலாந்தில் பிறந்த ஹட்சின்சன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றார். பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு ஆசிரியராக பணிக்கு சென்றார். பின்னாளில், அமெரிக்காவிற்கு சென்று யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார். 

ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா. வட அமெரிக்கா என பல்வேறு பகுதிகளில் சூழலியல் பற்றி ஆராய்ந்தார் ஹட்சின்சன். குறிப்பிட்ட சூழலில் உயிரினங்கள் வாழ்வதற்கான பல்வேறு காரணங்களை தேடினார். ஏரிகளைப் பற்றி ஆய்வு செய்த முதல் அறிவியலாளர்  (limnologist), எவ்லின் ஹட்சின்சன் தான்.

கோட்பாட்டு உயிரியலாளராக ஆராய்ச்சிகளை செய்தவர், படிம விலங்கின மாதிரிகளைக் கொண்டு  சூழலுக்கும் அவற்றுக்குமான தொடர்பை அறிய முயன்றார். வெப்பமயமாதலை முன்னரே கணித்தவர் என சூழலியலில் கருதப்படும் ஆராய்ச்சியாளர் எவ்லின் ஹட்சின்சன். 



https://www.oxfordbibliographies.com/view/document/obo-9780199830060/obo-9780199830060-0096.xml

https://news.yale.edu/2015/11/21/ecology-evolution-climate-change-g-evelyn-hutchinson-and-founding-modern-ecology


கருத்துகள்