மக்கள் தொகைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! - டெட் நார்தஸ்
மொழிபெயர்ப்பு நேர்காணல்
டெட் நார்தஸ் (Ted Nordhaus)
நிறுவனர் பிரேக்த்ரோ இன்ஸ்டிடியூட்
சூழலியலாளர்கள், காலநிலை மாற்ற அபாயத்தைத் தவிர்க்க மக்கள்தொகை கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகிறார்களே?
மக்கள்தொகை அதிகரிப்பு என்பது மறைமுகமாக பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. அதனைக் குறைப்பது என்பது தவறானது. கிராமத்தில் வறுமையில் வாழ்ந்த மக்கள் இன்று நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த மாற்றம் காலப்போக்கில் இயல்பாக நடந்தது. ஏழை மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்கிறது. அவர்கள் வேலையைத் தேடிக்கொண்டு நலமாக வாழ்கிறார்கள். தேவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இது சமூக மேல்தட்டினருக்கு பிடிக்காமல், மக்கள்தொகை கட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழலியலாளர்களில் பெரும்பாலானோர் வசதியானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சூழல் மாதிரிகள் பற்றிய உங்கள் கருத்து?
சூழல் அறிவியலாளர்கள், சூழல் மாதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எவையும் துல்லியமாக வெப்பநிலை அதிகரிப்பதை நமக்கு காட்டவில்லை. அப்படி அவை காட்டினாலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பொருளாதார செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்வது கடினமாகவே இருக்கும்.
சூழல் மாதிரிகளில் தொழில்நுட்ப மேம்பாடு தேவை என்கிறீர்களா?
சூழல் மாதிரிகளை தொழில்நுட்பம் சார்ந்து மாற்றினாலும் அதில் நிலையாமை உள்ளது. அதில், காலநிலை விளைவுகள், பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது பற்றிய கேள்விகளுக்கு பதில்களே கிடைப்பதில்லை. சூழல் மாதிரிகள் வெப்பத்தின் அபாயம், கார்பன் வெளியீட்டு அளவு, தொழில்நுட்பத்திற்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கூற வேண்டும். சூழல் மாதிரிகளை சரியாக பயன்படுத்தினால், நம் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.
https://www.worksinprogress.co/issue/interview-ted-nordhaus-on-ecomodernism/
https://thebreakthrough.org/
கருத்துகள்
கருத்துரையிடுக