ஒருவரின் கன்னம் சிவக்க என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?
ஒருவரின் கன்னம் சிவப்பது என்ன காரணத்தால்?
உண்மை. பொதுவாக ஒருவருக்கு கூச்சம், வெட்கம், அவமானம், திகைப்பு ஆகிய சூழ்நிலைகளில் முகம் சிவந்துபோகும் என புரிந்துகொண்டிருக்கிறோம். அறிவியல்பூர்வமாக பார்த்தால், உபரியாக உள்ள ரத்தம் தோலின் கீழுள்ள ரத்த நாளங்களில் வேகமாக பாய்வதால் தான் கன்னம் சிவக்கிறது. கன்னத்தில் ஏற்படும் சிவப்பு நிறத்திற்கு வெப்பம், நோய், மருத்துகள், மது, காரசார உணவுகள், ஒவ்வாமை, உணர்ச்சிகள் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. கன்னத்தில் உள்ள தசைகளை, நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது.
மைக்ரோவேவ் ஓவனில் உலோக பாத்திரங்களை வைப்பது சரியானதா?
உண்மை. பிளாஸ்டிக், கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். மாறாக, உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தினால் மைக்ரோவேவ் ஓவன் விரைவில் பழுதடையும். ஓவனில் உணவை சமைக்க பயன்படும் குற்றலைகள், மின்காந்த அலைகளாகும். ஓவனில் உருவாகும் குற்றலைகள், உணவுப்பொருளால் ஈர்க்கப்படுவதன் காரணமாகவே உணவு வேகிறது. ஆனால், உலோகப்பாத்திரத்தைப் பயன்படுத்தும்போது உணவு சீராக வேகாது. உலோகம் சிறந்த மின்கடத்தி என்பதால், குற்றலைகளை உடனே பிரதிபலிக்கும். இதனால், உலோகமும், ஓவனும் கடுமையாக சூடாகின்றன. மேலும் குற்றலைகள் காரணமாக உலோகங்களிலுள்ள எலக்ட்ரான்கள் நகரத் தொடங்குகின்றன. தற்காலிகமாக எலக்ட்ரான்கள் காற்றில் இடம்பெயரும் நிலைக்கு ஆர்சிங் (Arcing) என்று பெயர். இந்நிலையில் ஓவன் தீப்பற்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
https://engineering.mit.edu/engage/ask-an-engineer/why-cant-we-put-metal-objects-in-a-microwave/
https://www.mentalfloss.com/article/32032/why-cant-you-put-metal-microwave
கருத்துகள்
கருத்துரையிடுக