சட்டவிரோத வணிகம் சமூகத்தைக் கடுமையாக பாதிக்கிறது! வூ ஹோவாய் நாம் டங்

 











வூ ஹோவாய் நாம் டங்

ஆராய்ச்சியாளர்,கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், டென்மார்க்


நாம் டங், காண்டாமிருக கொம்புகளை வணிகம் செய்வது பற்றிய வாடிக்கையாளரின் மனநிலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 

சட்டவிரோத வணிகம் சமூகத்தை பாதிப்பதாக நினைக்கிறீர்களா?

அரசின் சட்டப்பூர்வமான வணிகத்தில் போதுமான கொம்புகள் கிடைக்காதபோது, வாடிக்கையாளர்கள் சட்டவிரோத வணிகர்களை நாடிச்செல்கிறார்கள். இப்படி சட்டவிரோதமாக காண்டாமிருக கொம்புகளை வாங்குவது காட்டின் பல்லுயிர்த்தன்மையை அழிக்கிறது. காடுகளில் கிடைக்கும் சாதாரணமான பொருட்களை குறைந்த வருமானமுள்ள குழுவினர் பெறுகிறார்கள். மிகச்சிலர் மட்டுமே அதிக மதிப்பான பொருட்களைத் தேடுவதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம். 

எப்படி விலங்குகளிலிருந்து பெறும் பொருட்கள் பற்றிய தகவல்களை சேகரித்தீர்கள்?

சட்டவிரோத வியாபாரச் சங்கிலி அமைப்பில் உள்ள வேட்டைக்காரர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரிடமும் பேசியிருக்கிறேன். வியட்நாமில் உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் வயதானவர்களாக, வசதியானவர்களாக இருந்தனர். 

சட்டப்படி விலங்குகளிடமிருந்து பொருட்களை பெற்றுவிற்பது பயன் தருமா?

மருத்துவக் காரணங்களுக்காக காண்டாமிருக கொம்புகளை பயன்படுத்துவது உள்ளூர் கலாசாரம் சார்ந்தது. சட்டப்படியான விற்பனை, விலங்குகளின் சட்டவிரோத வேட்டை, கடத்தலை தடுக்காது. சட்டரீதியான நடவடிக்கையோடு, விலங்கிடமிருந்து பெறும் பொருட்களின் தேவை குறைப்பது தொடர்பான பிரசாரம் உதவலாம். இதுவரை பொருட்களை வாங்கியவர்கள் மேல் வழக்குப் பதியப்பட்டதில்லை. தண்டனையும் அளிக்கப்பட்டதில்லை. 

https://www.researchgate.net/profile/Hoai-Nam-Dang-Vu

https://www.downtoearth.org.in/blog/wildlife-biodiversity/rhino-horn-consumers-reveal-why-a-legal-trade-alone-won-t-save-rhinos-81236

https://ptes.org/success-stories/new-insights-into-rhino-horn-consumers/

கருத்துகள்