இடுகைகள்

ஆஹானா குமாரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தி, ஓடிடி தளத்தில் பிரபலமாகி வரும் புதிய நடிகர்கள்!

படம்
                    புதிய நடிகர்கள் - மாறும் திரையுலகம் 2004 ஆம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தில் விஜய் ராஸ் பிரியாணி கடையில் உட்கார்ந்து ஐந்து ரூபாய் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருப்பார் . அப்போதுதான் அவருக்கு சந்தேகம் எப்படி ஐந்து ரூபாய் பிரியாணி சாத்தியம் என கடைக்கார ரிடம் கேட்க அதற்கு அருகிலிருப்பவர் காக்காவைத்தான் பிரியாணி செய்திருக்கிறார்கள்என உண்மையை உடைப்பார் . நம்மூரில் விவேக் செய்த அதே காமெடிதான் . இந்தியில் இப்படி மாறியிருக்கிறது . இதில் கவனிக்க வேண்டியது பிரியாணியை அல்ல காக்கா பிரியாணி என்ற உண்மையைச் சொன்ன துணைநடிகர் எப்படி வளர்ந்துள்ளார் என்பதைத்தான் . இப்படி நடித்த படம் கூட சரியாக ஓடவில்லை . ஆனால் அவரது நடிப்பு பேசப்பட்டது . பிறகு 14 ஆண்டுகள் சிறிய பாத்திரங்களில் நடித்தவருக்கு ஸ்த்ரீ படம் பெரிய வெற்றியைக் கொடுத்தது . இப்போது யூகித்திருப்பீர்கள் . அந்த நடிகர் யார் என்று . மிர்சாபூரில் இரண்டு சீசன்களாக நடித்து பட்டையைக் கிளப்பிய பங்கஜ் திரிபாதிதான் அவர் . கஞ்சன் சக்சேனா , நியூட்டன் , கேங்க் ஆப் வாசிப்பூர் , பரெய்லி கி பர்பி , மாசான் என ஏராளமான படங்களில்