இடுகைகள்

வைரல் மீம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உர்சல் திட்டம் தெரியுமா?

படம்
பிரேசிலை கலக்கும் கரடி ! பிரேஸிலில் விரைவில் அதிபர் தேர்தல் தொடங்கும் நிலையில் உர்சல் (Ursal-Union of the Socialist Republics of Latin America) எனும் கம்யூனிஸ்ட் கரடிதான் இணையத்தை கால்பந்துக்கு அடுத்தபடியாக கலக்கி வருகிறது . பல்வேறு மீம்களின் வழியாக இதனை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக வலதுசாரி கட்சிகள் தங்களின் இணையப்பிரசாரத்தில் இக்கரடியை பயன்படுத்தி வருகின்றனர் . பிரேஸிலின் பேட்ரியாட்டா எனும் சிறிய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த காபோ டேசியாலோ , " உர்சல் திட்டப்படி நாட்டை கம்யூனிய நாடாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது . இந்த முயற்சி நிறைவேற அனுமதிக்கக்கூடாது " என அதிபர் தேர்தல் விவாதத்தில் கொளுத்திப்போட விஷயம் சூடுபிடித்தது . உர்சல்என்றால் கரடி என்பது போர்ச்சுக்கீசிய அர்த்தம் . உர்சல் கரடியின் வரைபடம் , லோகோ , சுலோகன் , தேசியகீதம் , கால்பந்து அணி என இணையத்தில் பலரும் உருவாக்கி குவிக்கத் தொடங்கினர் . உர்சல் புரோஜெக்ட் என்பது 2001 ஆம் ஆண்டு பேராசிரியர் மரியா லூசியா விக்டர் பார்போஸா என்பவர் சாவோ பாலோ நகரில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்க , கரீபியன் இடதுசாரிகளின் மாநாட்டை கிண்டல