இடுகைகள்

உயிரியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரை மிரள வைக்கும் பயங்கள் நான்கு!

படம்
  ஒருவரின் பிள்ளை, அவரின் அப்பாவை இரண்டு விதமாக புகழ்பெறச்செய்யலாம். அவரை விட மோசம். அவரே பரவாயில்லைப்பா என இரண்டு விதமாக தனதுசெயல்களை அமைத்துக்கொள்ளலாம். நல்லவிதமாக இயங்கலாம். கெட்டவிதமாகவும் செயல்படலாம். இதெல்லாம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது? அவரின் மரபணுவா, அல்லது அவர் வளர்ந்த சூழ்நிலையா? இந்த விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. பரிணாம உளவியலில் இதைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்தான், கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்டீவன் பிங்கர். இவர் மனிதர்களுக்குள் உள்ள நான்கு பயங்களை சுட்டிக்காட்டினார். அதில் முதலாவதாக வருவது பாகுபாடு. ஒருவர் உலகில் குழந்தையாக பிறக்கும்போது அவர் மனது எழுதப்படாத சிலேட் பலகையாக உள்ளது. அனைவரும் ஒன்றானவர்களாக இருக்கிறார்கள். பிறகுதான் அவரின் குடும்பம், பணம், அரசியல் கருத்தியல் என வேறுபாடு தொடங்குகிறது.  இரண்டாவது, சீரற்ற தன்மை. அனைவரும் ஒன்று போலவே நகலெடுத்த சீனப்பொருட்கள் போல இருப்பதில்லை. பற்றாக்குறை, போதாமை கொண்டவர்களாக உள்ளனர். இப்படி உள்ளவர்கள் தங்களை மாற்றங்களுக்கு தயார்படுத்திக்கொள்வதில்லை. இவர்கள் அதிகாரத்தில் உள்ளபோது ச

எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

படம்
  ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹூயூபெர்மன் நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி? மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.   உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்   உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று. பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

சோகோட்ரா தீவு - தகவல்படம்

படம்
  நன்றி: ஆர். வெங்கடேஷ், பொறுப்பாசிரியர், பட்டம் இதழ் 

நவீன மின் உடலியங்கியல் துறையை உருவாக்கியவர்! எமில் டு பாய்ல் ரேமண்ட்

படம்
எமில் டு பாய்ஸ் ரேமண்ட் ( Emil Du Bois-Reymond 1818 -1896) ஜெர்மனியின் பெர்லினில் எமில் பிறந்தார். அங்குள்ள பிரெஞ்சு கல்லூரியில் படித்தவர், மருத்துவக்கல்வியை பெர்லின் பல்கலைக்கழகத்தில் கற்றார். மருத்துவம், உடற்கூறியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். மருத்துவத்துறை பேராசிரியர் ஜோகன்னஸ் பீட்டர் தனது இளம் உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.  பேராசிரியர் ஜோகன்னஸ், உயிரினங்களில் உள்ள மின்னாற்றல் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தார். எனவே, அவரைப் பின்பற்றி எமில் பட்ட ஆய்வுக்காக மின்சார ஆற்றல் உள்ள மீன்களை எடுத்துக்கொண்டார். 1858ஆம் ஆண்டு பெர்லினில் மருத்துவத்துறை பேராசிரியரானார்.  1867இல் பெர்லின் அறிவியல் அகாடமியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். நவீன மின் உடலியங்கியல் துறைக்கு உருவாக்கியவர். ஜெர்மன் பேரரசர், எமிலுக்காக மருத்துவக் கழகம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார். 1877, நவ.6 ஆம் தேதி மருத்துவக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.  1859-1877 காலகட்டத்தில் முல்லர்ஸ் ஆர்ச்சீவ் (Müllers Archiv)இதழில்  இணை ஆசிரியராக செயல்பட்டார்.  பிறகு காலமாகும்வரை,  ஆர்ச்சீவ் ஃபர் பிசியாலஜி (Archiv für Physiologie.)

உட்சுரப்பியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக போற்றப்படும் ஆளுமை! - எட்வர்ட் ஷார்பே ஸ்காஃபெர்

படம்
எட்வர்ட் ஷார்பே ஸ்காஃபெர் (Edward Albert Sharpey-Schäfer, 1850 -1935) உட்சுரப்பியல் துறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர். லண்டனில் வணிகராக இருந்த ஜே.டபிள்யூ.ஹெச். ஸ்ஹாஃபர் , ஜெஸ்ஸி ப்ரௌன் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். 1874ஆம் ஆண்டு, யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் மருத்துவப்படிப்பு படித்தார். இவருக்கு ஆசிரியராக கற்பித்தவர், மருத்துவர் வில்லியம் ஷார்பே. இதனால் ஆசிரியரின் பெயரை,  தனது பெயரில் சேர்த்துக்கொண்டார்.  1878ஆம்ஆண்டு லண்டலின் உள்ள ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1878ஆம் ஆண்டில் ராயல் இன்ஸ்டிடியூஷனில் பேராசிரியராக பதவியேற்றார். 1903ஆம் ஆண்டு செயற்கை சுவாசம் பற்றிய ப்ரோன் பிரஷர் (Prone pressure) முறைக்காக புகழ்பெற்றார் . 1911-12 காலகட்டத்தில் பிரிட்டிஷ் அறிவியல் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். 1933ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். உட்சுரப்பியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக (Suprarenal of pituitary extracts ) எட்வர்ட் போற்றப்படுகிறார்.   https://royalsocietypublishing.org/doi/10.1098/rsbm.1935.0005 https://www.ency

நீரின் ஏற்படும் மின்னோட்டத்தை அளவிடும் மீட்டரை உருவாக்கியவர்! - சன்டாரியோ சன்டாரியோ

படம்
  சன்டாரியோ சன்டாரியோ (  Santorio santorio  1561-1636) இத்தாலி நாட்டின் ஸ்லோவேனியாவில், 1561ஆம் ஆண்டு பிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர். அன்றைய புகழ்பெற்ற பாடுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua.) மருத்துவக்கல்வி கற்றார்.  1582ஆம் ஆண்டு பட்டம் பெற்றபிறகு, மருத்துவராக சில ஆண்டுகள் வேலை செய்தார். வெனிஸ் நகரில் கலீலியோவை சந்தித்து பேசியது முக்கியமான நிகழ்ச்சி. அதற்குப் பிறகுதான் சன்டாரியோ கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தினார். தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மாஸ்கோப் (Thermoscope) என்ற கருவியை  உருவாக்கினார். இக்கருவியில் எண்களை சேர்த்து அன்றே வியப்பூட்டியவர். நோயாளிகளின் நாடித்துடிப்பைக் கணிக்க பல்சிலோஜியம் (Pulsilogium) எனும் கடிகாரத்தை உருவாக்கினார். கணிதம், இயற்பியல் ஆகிய துறைகளின் கருத்துகளையும் மருத்துவத்திற்கு பயன்படுத்த முயன்றார்.  பின்னாளில் நீரில் ஏற்படும் மின்னோட்டத்தை கணிக்கும் மீட்டரையும் உருவாக்கினார். மருத்துவத்துறையில் சான்டாரியோ செய்த சோதனைகள் அனைத்துமே முக்கியமானவை. எடையிடுவதற்கான நாற்காலி ஒன்றை தானாகவே உருவாக்கி வந்தார். 1611ஆம் ஆண்டில் மருத்துவக்கொள்கைகள் சார்ந்த

பாலூட்டிகளின் கரு முட்டை செல்களைப் பற்றி உலகிற்கு அறிவித்தவர்! - கார்ல் எர்னஸ்ட் வான் பேயர்

படம்
கார்ல் எர்னஸ்ட் வான் பேயர் ( karl Ernst Von Baer 1792-1876) உயிரியலாளர், இயற்கை அறிவியலாளர் நான் எஸ்டோனியாவின் பீப் நகரில் பிறந்தேன். டோர்பட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1814ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றேன். பிறகு, ஜெர்மனியின் உர்ஸ்பெர்க் நகருக்கு இடம்பெயர்ந்தேன். அங்குதான் எனது பிற்கால ஆராய்ச்சிகளுக்கு காரணமாக மருத்துவர் இக்னாஸ் டோலிங்கரைச் சந்தித்தேன்.  அவர்தான், கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியைச் செய்ய ஊக்குவித்தார். கருவியல் துறை சார்ந்து நான் பிளாஸ்டுலா (Blastula), நோடோசோர்ட் (Notochord)ஆகியவற்றைக் கண்டறிந்தேன்.  பேயர், விலங்குகளின் உட்கரு சார்ந்த ஆராய்ச்சியோடு இன பண்பாட்டியல், புவியல் ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். கருவுக்குள் இருக்கும் செல் அடுக்குகள் பற்றிய ஜெர்ம் லேயர் கோட்பாட்டை (Germ-layer theory) உருவாக்கினார். இதுவே நவீன கருவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தது.  1827ஆம் ஆண்டில் முதன்முறையாக பாலூட்டிகளின் கருமுட்டை செல்களைப் பற்றி அறிவியல் உலகிற்கு கூறியவர்.  https://en.wikipedia.org/wiki/Karl_Ernst_von_Baer https://www.encycloped

நோபல் பரிசு பெற்ற நியூரோட்ரான்ஸ்மீட்டர் ஆய்வு - ஓட்டோ லோவி

படம்
ஓட்டோ லோவி (1873 -1961) ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் பிறந்தவர், லோவெய். பெற்றோர் ஜேக்கப் லோவி, அன்னாவில்ஸ்டாட்டர். பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றார். காசநோய் பாதிப்பால் மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாவதைப் பார்த்தார். இதனால், குணப்படுத்தமுடியாத நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்ய முயன்றார்.  1902ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்தவர்,ஹென்றி டேலுடன் இணைந்து ஆராய்ச்சியை செய்யத் தொடங்கினார்.  1936ஆம் ஆண்டு, டேல் மற்றும் லோவி செய்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்  ஆய்வுக்கு மருத்துவப்பிரிவில் நோபல் பரிசு கிடைத்தது. 1938ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.எனவே, 1940ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் (Pharmacology) பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.   1954ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் வெளிநாட்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   https://www.nobelprize.org/prizes/medicine/1936/loewi/biographical/

உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர்! - ஸ்டான்லி என் கோஹென்

படம்
  ஸ்டான்லி என் கோஹென் (Stanley N cohen 1935) அமெரிக்காவின் நியூஜெர்சியில் யூதப்பெற்றோருக்கு(பெர்னார்ட், இடா) பிறந்தேன்.  எலக்ட்ரீசியனான பெற்றோருக்கு பல்வேறு வேலைகளில் உதவி வந்தேன். பிறகு, பென்சில்வேனியாவில்  மருத்துவம் படித்தேன். பாக்டீரியாவின் டிஎன்ஏ வளையமான பிளாஸ்மிட்ஸ் (Plasmids) பற்றி ஆய்வு செய்தேன்.  பாஞ்சோ, உகுலேலே இசைக்கருவிகளை  இசைப்பது பிடித்தமானது. 1964-65 காலகட்டத்தில், ஜெர்ரி ஹர்விட்ஸ் ஆய்வகத்தில் பணியாற்றியபோது பாக்டீரிய மரபணுக்கள் மீது ஆர்வம் பிறந்தது. 1972ஆம் ஆண்டு ஹெர்பர்ட் போயர் என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்து ஒன்றாக ஆய்வு செய்யத் தொடங்கினர். 1973ஆம் ஆண்டு,  மறுசீரமைப்பு டிஎன்ஏ நுட்பத்தைக் கண்டறிந்து வெளியிட்டனர்.   1988ஆம் ஆண்டு கோஹெனுக்கு அமெரிக்க தேசிய  அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு போயருக்கு இப்பரிசு, வழங்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் ஸ்டான்லி என் கோஹேனுக்கு முக்கியப் பங்குண்டு.  https://www.whatisbiotechnology.org/index.php/people/summary/Cohen 

சேவல்களின் விரைப்பகுதி மாற்று அறுவைசிகிச்சை செய்து வென்றவர்! அர்னால்ட் அடால்ப் பெர்த்ஹோல்ட்

படம்
  அர்னால்ட் அடால்ஃப் பெர்ட்ஹோல்ட்(Arnold Adolph Berthold 1803 -1861) அர்னால்ட், ஜெர்மனியின் சோஸ்ட் நகரில் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  காட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் (University of Göttingen) மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்.  1823ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ ஆய்வைச் சமர்ப்பித்தார்.  1829ஆம் ஆண்டு மனிதர்கள், விலங்குகள் பற்றிய தனது மருத்துவ நூலைப் பதிப்பித்தார். பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றுலாவாகச் சென்ற அர்னால்ட், 1835ஆம் ஆண்டு காட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அங்கு, மருத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். கூடுதலாக, உயிரியல்துறையின்  ஆவணப் பொருட்களுக்கு காப்பாளராக செயல்பட்டார். ஆர்செனிக் விஷத்திற்கு எதிரான விஷமுறிவு மருந்தைக் (hydrated iron oxide) கண்டுபிடித்தார். கிட்டப்பார்வை, முடி,விரல்நகங்கள் வளருவது, கர்ப்பசெயல்முறை பற்றி ஆராய்ச்சி செய்தார். 1849ஆம் ஆண்டு சேவல்களின் விரைப்பகுதிகளை மாற்றிப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்வது பற்றி,  ட்ரான்ஸ்பிளான்டேஷன் டெர் ஹோடன் (Transplantation der Hoden)என்ற அறிக்கையை வெளியிட்டார்

டாலி என்ற செம்மறி ஆட்டிற்கு ஏன் இத்தனை புகழ்?

படம்
  பல ஆண்டுகளாக குளோனிங் செய்வது என்பதை, அனைவரும் திரைப்படங்களில் தான் பார்த்து வந்தார்கள். டாலி என்ற ஆடு இந்த முறையில் உருவாக்கப்படும் வரை. இந்த செம்மறி ஆடுதான் முதன்முதலில் செம்மறி ஆட்டின் ஸ்டெம்மில் இருந்து உருவாக்கப்பட்டது.  இந்த குளோனிங் ஆட்டிற்கு மூன்று அம்மாக்கள் உண்டு. ஒரு ஆட்டில் டிஎன்ஏ, மற்றொன்றில் கருமுட்டை, மூன்றாவது ஆட்டை வாடகைத்தாயாக பயன்படுத்தினார்கள். இப்படித்தான் டாலி என்ற குளோனிங் ஆடு உருவாக்கப்பட்டது.  1996ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, டாலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆடு பிறந்து ஆறரை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் ஆயுள் காலம் பனிரெண்டு ஆண்டுகள் ஆகும். இந்த ஆடு குறுகிய காலமே வாழ்ந்ததற்கு குளோனிங் செய்தது காரணமாக என்று தெரியவில்லை.  டாலியை உருவாக்கும்போது பெறப்பட்ட ஸ்டெம் செல் கொண்ட ஆட்டிற்கு ஆறுவயதாகியிருந்தது. எனவே பிறக்கும்போது, டாலியின் வயது ஆறு என்று நாம் கொள்ளலாம்.  டாலி ஆடு வெற்றிகரமான ஆறு குட்டிகளை ஈன்றது. இதனை தானாகவே செய்தது. இக்குட்டிகளுக்கு போனி, சாலி, ரோஸி, லூசி, டார்சி, காட்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று நடைபெறும் குளோனிங் ஆரா

லட்சத்தீவை சுற்றுலாதலமாக மாற்றுவது சூழலை அழிக்கும் முயற்சி! - ரோகன் ஆர்தர், கடல் சூழலியலாளர்

படம்
                L-R(5th person rogan)     மாலத்தீவு வளர்ச்சி மாடல் லட்சத்தீவுகளை அழித்துவிடும் ரோகன் ஆர்தர் கடல் உயிரியலாளர் பருவச்சூழல் பாதுகாப்பு என வரும்போது லட்சத்தீவுகள் பற்றி ஏன் அதிகம் பேசுகிறார்கள் ? அப்படியென்றால் நான் உங்களுக்கு பவளப்பாறை எப்படி உருவாகிறது என விளக்கவேண்டும் . கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள காடுகள்தான் பல்வேறு புயல்களையும் , அலைகளையும் மட்டுப்படுத்துகின்றன . இங்குள்ள கடல்பகுதியில் பவளப்பாறைகள் தானே வளருகின்றன . இவை வட்டவடிவில் இங்கு உருவாகி வளருகின்றன . இங்கு தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளால் பவளப்பாறைகளின் வளர்ச்சி தடைபட்டு , தானே பாதிப்பை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது . இந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி ஆழமாகி வருகிறது . ஆய்வுகள் மூலம் அங்கு ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம் . லட்சத்தீவுகளை சுற்றுலாவிற்கு ஏற்றபடி மாற்றினால் இயற்கைச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் நடைபெறும் . இங்குள்ள கலாசாரம் , சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான தொடர்பு எப்படியிருக்கிறது ? இங்குள்ள மக்கள் சிறப்பான கல்வி கற்றவர்

செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள்

படம்
    ராபர்ட் ஹூக் செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள் ராபர்ட் ஹூக் 1635-1703   கட்டுமானம், பழங்காலவியல், வானியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி சாதனை படைத்தவர். இவர் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர். இவர் ஐசக் நியூட்டனின் கருத்துகளில் வேறுபாடு கொண்டவர். ஆன்டனி வான் லியூவென்ஹாக் 1632-1723 டச்சு நாட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, கூடவே ஆராய்ச்சியாளரும் கூட. கூடைகளை தயாரிப்பவரின் மகனாக இருந்தாலும்  ஆராய்ச்சி செய்யும் திறனால் நுண்ணுயிரிகளை காணும் நுண்ணோக்கிகளை உருவாக்கினார். ஒற்றை செல் உயிரிகளை அடையாளம் கண்டார். தியோடர் ஸ்வான் 1810-1882 ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர். நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தார். நரம்பு மண்டலம், வளர்சிதை மாற்றம், செரிமானம் பற்றிய கண்டுபிடிப்புகளை செய்தார். பின்னாளில் இறையியலின் மீது கவனம் செலுத்தினார். கமில்லோ கோல்ஜி 1843-1926 இத்தாலிய மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். நரம்பு மண்டலம் பற்றி ஆராய்ச்சி செய்தவர் பின்னர் அப்படியே மலேரியா ஆராய்ச்சிகளுக்கு வந்து சேர்ந்தார். இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு தான் பிறந்த

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

படம்
  cc மூளை ஆராய்ச்சி     மினி மூளை ஆராய்ச்சி ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள். கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார். பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ளே வர

எச்சரிக்கை பலகைகளில் சிவப்பு ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? எச்சரிக்கைப் பலகைகள் ஏன் சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன? உயிரியல் அடிப்படையில் சிவப்பு என்பதை நெருப்பு, அபாயம் என நம் நினைவுகளில் பதிந்து வைத்திருக்கிறோம். எனவே சிவப்பு நிறம் என்றால் சடக்கென ஆதிநினைவான நெருப்பின் நிறத்திலிருந்து நிகழுக்கு மீண்டு வண்டி பிரேக்கை இழுத்துப்பிடித்து நிற்போம். அதேசமயம் சில நாடுகளில் நீலநிற விளக்கு போன்ற பரிசோதனைகளையும் செய்கிறார்கள். இயற்பியல் காரணத்தைப்  பார்த்தால், சிவப்பு பனியோ மழையோ அனைத்து கண்டிஷன்களிலும் பளிச்சென அனைவரையும் ரீச்சாகும். அதேநேரம் சீனாவில் மஞ்சள் பின்னணியில் கறுப்பு கோடுகள் பயன்படுகின்றன.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்