சேவல்களின் விரைப்பகுதி மாற்று அறுவைசிகிச்சை செய்து வென்றவர்! அர்னால்ட் அடால்ப் பெர்த்ஹோல்ட்

 








அர்னால்ட் அடால்ஃப் பெர்ட்ஹோல்ட்(Arnold Adolph Berthold

1803 -1861)


அர்னால்ட், ஜெர்மனியின் சோஸ்ட் நகரில் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  காட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் (University of Göttingen) மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்.  1823ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ ஆய்வைச் சமர்ப்பித்தார்.

 1829ஆம் ஆண்டு மனிதர்கள், விலங்குகள் பற்றிய தனது மருத்துவ நூலைப் பதிப்பித்தார். பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றுலாவாகச் சென்ற அர்னால்ட், 1835ஆம் ஆண்டு காட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அங்கு, மருத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். கூடுதலாக, உயிரியல்துறையின்  ஆவணப் பொருட்களுக்கு காப்பாளராக செயல்பட்டார்.

ஆர்செனிக் விஷத்திற்கு எதிரான விஷமுறிவு மருந்தைக் (hydrated iron oxide) கண்டுபிடித்தார். கிட்டப்பார்வை, முடி,விரல்நகங்கள் வளருவது, கர்ப்பசெயல்முறை பற்றி ஆராய்ச்சி செய்தார். 1849ஆம் ஆண்டு சேவல்களின் விரைப்பகுதிகளை மாற்றிப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்வது பற்றி,  ட்ரான்ஸ்பிளான்டேஷன் டெர் ஹோடன் (Transplantation der Hoden)என்ற அறிக்கையை வெளியிட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த உட்சுரப்பியல் சங்கம், 1980ஆம் ஆண்டு தொடங்கி பெர்ட்ஹோல்ட் விருதை உருவாகி சாதனையாளர்களுக்கு வழங்கிவருகிறது. உட்சுரப்பியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளைசெய்தவர், அர்னால்ட். எனவே அத்துறையின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.


https://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781119205791.ch24

https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/berthold-arnold-adolphe

https://www.endokrinologie.net/berthold-medaille.php

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்