இடுகைகள்

தகவல் திருட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2020 ஆம் ஆண்டிற்கான மோசமான மால்வேர்கள்! - மால்வேர், ரான்சம்வேர், டிரோஜன் புரோகிராம்கள்

படம்
            மோசமான மால்வேர்கள் 2020 எமோடெட் பெரும்பாலும் இமெயில் மூலம் கணினிகளுக்கு பரவியது . இந்த மால்வேர் கணினியை பாதித்திருக்கிறது என்று கூட ஒருவர் கண்டுபிடிப்பது கடினம் . அடிக்கடி கணினியில் ஆன்டிவைரஸ் அப்டேட் கேட்டால் உஷாராகிவிடுவது உத்தமம் . இந்த மால்வேர் , தகவல்திருட்டுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது . ஒருவரின் கணினியில் பரவினால் அவரின் தொடர்பிலுள்ள அனைவருக்கும் அவரின் பெயரில் இமெயில்கள் பரவலாக செல்லும் . அதை கிளிக் செய்தால் மால்வேர் செயல்படத்தொடங்கும் . டிரைடெக்ஸ் இது ஒரு டிரோஜன் புரோகிராம் . பெரும்பாலும் ஒருவரின் வங்கித் தகவல்கள் , பாஸ்வேர்டுகளை திருடுகிறது . 2014 முதல் கணினிகளை பாதித்து வரும் இந்த புரோகிராம் கணினியின் செயல்பாடுகளை கண்காணித்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து பிற ஆபத்தான புரோகிராம்களை தரவிறக்கம் செய்துகொள்கிறது . பெரும்பாலும் இமெயில் மூலம் பரவுகிறது . எமோடெட் நச்சு நிரல் மூலம் கூடுதலாக கணினிக்கு வருகிறது புரோகிராம் இது . எக்காரணம் கொண்டும் இமெயிலில் வரு்ம் லிங்குகளை திறக்காதீர்கள் . ரியுக் டெத்நோட் எனும் ஜப்பானிய காமிக

டிஎன்ஏ சோதனைகள் ஆபத்தானவையா? -இங்கிலாந்தில் தொடரும் கண்காணிப்பு!

படம்
மெடிக்கல் நியூஸ் டுடே அதிகரிக்கும் டி.என்.ஏ. சோதனைகள்! செய்தி: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் டி.என்.ஏ வை சோதனை செய்யும் சாதனங்கள் விற்கப்படுகின்றன. இச்சோதனைகளின் விளைவுகள் பற்றிய விவாதங்கள் மருத்துவ வட்டாரங்களில் தீவிரமாகியுள்ளன. இங்கிலாந்தில் டி.என்.ஏ. சோதனைகளைச் செய்வதற்கான சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அங்குள்ள தகவல் கமிஷனர் அலுவலக தகவல்படி, தோராயமாக 40 லட்சம் மக்கள் டி.என்.ஏ சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வணிகத்தில் மூன்று தனியார் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.  டி.என்.ஏ. சோதனை தவறல்ல; முறையான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் இதனைச் செய்வது அவசியம்.  தனியார் நிறுவனங்கள் மக்களின் தகவல்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தந்து பராமரிக்கிறார்கள் என்ற பயம், புகார்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக,  தகவல் கமிஷனர் அலுவலகத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் என்ன பிரச்னை வர வாய்ப்புள்ளது? இரண்டாம் நிலை நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தச் சோதனை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவியல் வட்டாரத்தினர் எச்சரி