இடுகைகள்

மயிலாப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பங்குனி விழாவில் விழி பிதுங்கும் மயிலாப்பூர்!

படம்
  மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித்திருவிழா பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. கபாலீஸ்வரரின் விழாக்களில் பிரபலமானது. பல லட்சம் பேர் வந்து ஊரை இறைவனின் சிலையுருவங்களோடு சுற்றி வருவார்கள். கூடவே பக்தர்களுக்கு தண்ணீர் கலக்கிய மோர், சாச்சி, முக்தி மசாலாக்களால் மணக்கும் தக்காளிச்சோறு என நிறைய  சோறு போடும் வணிக நிறுவனங்கள் வருவார்கள். மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அன்று தங்களை அன்ன தாதாவாக கருதிக்கொண்டு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். பாலகுமாரன் சொல்லுவது போல, இப்படி அன்னம் வழங்குவதும் ஒருவித வேண்டுதல்தான். வயிற்றுப்பசியை  அணைத்து தனது நலம் நாடுவதுதான். புண்ணியம் தேடுவதுதான்.  அன்னதானம் நடந்தபிறகு மத்தள நாராயணன் தெரு, கடைவீதி, கச்சேரி சாலை என அனைத்து இடங்களிலும் சாலை எண்ணெய்யில் நனைந்து கிடக்கும். சோற்று பருக்கைகள், இன்ஸ்டன்ட் சோற்றுத் தட்டுகள், பாக்குத் தட்டைகள் என ஏராளமாக நிரம்பிவிடும். எனக்கு இதைப் பார்ப்பது பிடிக்கும். நகரை பகலிலும் இரவிலும் பார்க்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு வேளையிலும் நகரம் தனித்தன்மையான இயல்பில் இருக்கும். பகலில் பார்க்கும் நகரம் இரவில் காணக்

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும

கூட்டத்தில் தனியாக சிந்திக்கும் ஒருவன்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 8 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? விபத்தினால் ஏற்பட்ட வலி இன்னும் உங்களுக்கு தொடையில் இருக்கும். நீங்கள் நலம்பெற பெருமாளை பிரார்த்திக்கிறேன். விபத்து என்பது தற்செயலானது என்பதால் அதில் நமது கட்டுப்பாடு எதுவும் கிடையாது. விபத்து ஏற்படுவதற்கு முன்னர் முதல் அறிகுறி நேரும். நமது கவனம் குலைந்துபோவதுதான், அது. இதற்கு நமது ஜாதகத்திலுள்ள பிரச்னைகள் முதல் காரணம். அடுத்து, நம்மைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின் பாதிப்பும் உண்டு. இந்த விளைவுகளை நமக்கு காட்டுவது நாம் வளர்க்கும் கால்நடைகள், செல்லப்பிராணிகள்தான். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடுமையைக் குறைக்க குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம். நான் சாமி கும்பிடும்போது வணங்குவது மட்டுமே செயலாகவும் எண்ணமாகவும் இருக்கிறது. எந்த வேண்டுதல்களையும் சரியாக நினைத்து சாமி கும்பிட்டதாக எனக்கு நினைவில்லை. உறவுகள் தமக்கான லாப, நஷ்டக்கணக்குகளை போட்டுக்கொண்டு வலம் வரும்போது இறைவனை மட்டுமே நம்ப முடியும். அறிவுக்கான சரியான துணையாக மனைவி அமையாதபோது ஆண் முழுக்க தனிமையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுக்க நேரிடும

மயிலாப்பூர் டைம்ஸ் - அப்லோடை விட டவுன்லோடு முக்கியம்!

படம்
பிரம்மானந்தம் நாயக் படத்தில் ஜிலேபியாக.... மயிலாப்பூர் டைம்ஸ் -- இனிப்பு பரிதாபங்கள்! ஆபீஸ் செல்வது பெரிய சிரமம் இல்லை. புதன்கிழமை தாண்டினால் போதும். விகடன் வியாழன் வரும். படித்து சமாளித்தால் வெள்ளி குங்குமம். அதில் ரத்தமகுடம் குஜாலாக படிக்கலாம் என்பதுதான் பெரும்பாலான நேர நினைப்பு. ஆனால் நடப்பது அப்படியே தலைகீழாக இருக்கும். வாசிப்பு வெறி, ஐலைக் காமிக்ஸ் வலைத்தளத்தில் கூட முடியும். ஆனால் ஸ்நாக்ஸ் வெறி இருக்கிறதே? சென்னகேசவா காப்பாற்று என்றாலும் நாக்கு அத்தனை தந்திரங்களையும் வீணாக்கிவிட்டது. வீக் எண்டில் முளைத்த வில்லங்கம், என்னுடைய வயிற்றை களேபர பூமியாக்கியது. நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மண்டையன் கடையை நெருங்கும்வரை. பஜார் தெருவிலுள்ள புகழ்பெற்ற கடைதான் அது. லட்டு, மிக்சர், பாதுஷா என மனசைக் கலைக்க அப்படியே நின்றேன். படியேறினால் கடை ஓனருக்கு என் முகம் தெரியும். ஏறினேன். லட்டு கால்கிலோ குடுங்க என்றேன். புன்சிரிப்புடன் பார்த்தவர், ஒருமணிநேரம் கழிச்சு வாங்கிக்கலாமே என்றார். என்னடாது, லட்டு கண்ணு முன்னால வெச்சுக்கிட்டு எதுக்கு ஒருமணிநேர