இடுகைகள்

மக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்கள் அரசை நம்பாமல் அவர்களை மட்டுமே நம்பவேண்டும்! - பன் பட்டர் ஜாம்

படம்
  1 எனதருமை நாட்டு மக்களே , வணக்கம்.  இன்றுவரை  நீங்கள் தாக்குப்பிடித்து எனது நாட்டில் உயிரோடு வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நம்புங்கள். அப்படியே உங்களை ஆளும் என்னை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுங்கள். கரம் கூப்பித் தொழுங்கள்.  மாசி மகம் எனும் நன்னாளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனது ஆட்சியில் நீர்நிலைகளை குறைத்து மக்களுக்கு பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்க அபாயத்தை குறைத்திருக்கிறேன்.  இந்த சீர்திருத்தங்களுக்கு முன்னர் நீர்நிலைகளோடு கொண்டாடும் பண்டிகைகள் எப்போதும் நமது  பாரத நாட்டில் உண்டு. ஜில்பவாசம் எனும் பழக்கத்தை மக்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி குடும்பத்தை விட்டுவிட்டு நதிக்கரையில் ஒருமாதம் தங்கியிருப்பார்கள். இவர்களை அங்கிருந்து விரட்டவே நதி நீரை பெரு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்தேன். இதன்மூலம் நீர் தனியார் நிறுவனங்களின் மூலம் பாதுகாக்கப்படும். அரசுக்கு  நதிகளை பாதுகாத்து பராமரிக்க பெரிய சுமை இதனால் நீங்குகிறது. மக்களும் காசு கொடுத்து இந்த நீரை பயன்படுத்திக்கொள்ளலாம். மக்களுக்கு பொறுப்புணர்வும் தங்க