இடுகைகள்

கொடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

chapter 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள்!

படம்
  அத்தியாயம் 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள் உலகம் முழுக்கவே அறக்கட்டளை, தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியை வழங்குவது போல தெரிந்தாலும் அதெல்லாம் வெளிப்படையான விஷயம் அல்ல. பெரும்பாலான தொழிலதிபர்கள், அவர்களது அறக்கட்டளை வழியாகவே நிதியை மடைமாற்றம் செய்து ஆராய்ச்சிகளை செய்கிறார்கள். விருதுகளை உருவாக்கி வழங்கினாலும் கூட சிறந்த சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பாளர்களை தங்களது நிறுவனத்திற்கென பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, பணத்தை நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. அதைப் புரிந்துகொண்டுதான், இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கவேண்டும்.  ஹே ஷியாங்ஜியான் வயது 81 மிடியா குழுமம் சீனா பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வரும் சீன தொழிலதிபர். 410 மில்லியன் டாலர்களை தனது ஹே சயின்ஸ் பவுண்டேஷன் வழியாக அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிட முன்வந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு, உடல்நலம், காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள், நிதியின் வழியாக நடைபெறவிருக்கிறது. 21.7 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட தொழிலதிபர், தனது ஆராய்ச்சியின் வழியாக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் சீனாவுக்

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீன