chapter 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள்!

 












அத்தியாயம் 2

அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள்


உலகம் முழுக்கவே அறக்கட்டளை, தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியை வழங்குவது போல தெரிந்தாலும் அதெல்லாம் வெளிப்படையான விஷயம் அல்ல. பெரும்பாலான தொழிலதிபர்கள், அவர்களது அறக்கட்டளை வழியாகவே நிதியை மடைமாற்றம் செய்து ஆராய்ச்சிகளை செய்கிறார்கள். விருதுகளை உருவாக்கி வழங்கினாலும் கூட சிறந்த சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பாளர்களை தங்களது நிறுவனத்திற்கென பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, பணத்தை நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. அதைப் புரிந்துகொண்டுதான், இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கவேண்டும். 


ஹே ஷியாங்ஜியான்

வயது 81 மிடியா குழுமம்

சீனா


பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வரும் சீன தொழிலதிபர். 410 மில்லியன் டாலர்களை தனது ஹே சயின்ஸ் பவுண்டேஷன் வழியாக அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிட முன்வந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு, உடல்நலம், காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள், நிதியின் வழியாக நடைபெறவிருக்கிறது. 21.7 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட தொழிலதிபர், தனது ஆராய்ச்சியின் வழியாக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் சீனாவுக்கு உதவ நினைக்கிறார். 


2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹே பவுண்டேஷன், இதுவரை 2.2 பில்லியன் யுவான்களை பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு வழங்கியுள்ளதாக அதன் வலைத்தளம் தகவல் தெரிவிக்கிறது. ஹேடாய் முதியோர் மையம் ஒன்றை ஷியாங் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த மையம் முதியோர்களை பராமரிப்பதோடு நிறுவனரின் சொந்த ஊரான ஷூண்டேவி்ல் பல்வேறு மறுவாழ்வு பணிகளையும் செய்து வருகிறது. 


-யூ வாங்


விக்ரோம் குரோமாதித்

வயது 70

நிறுவனர், தலைவர், அமடா கார்ப்.

தாய்லாந்து 


214 மில்லியன் டாலர்களை அமடா பவுண்டேஷனுக்கு ஒதுக்கியுள்ளார். 1996ஆம் ஆண்டு அறக்கட்டளையைத் தொடங்கியபோது, 2 மில்லியன் பாட்டை வழங்கினார். இதையெல்லாம் தனது சொந்த சொத்துக்களிலிருந்து வழங்கியுள்ளார். முதல் வரியில் கூறியுள்ள தொகை, விக்ரோம் இறந்தபிறகு அவரது அறக்கட்டளைக்கு வந்து சேரும், குறைந்த வருமானம் உள்ள நன்றாக படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறார். தாய்லாந்து நாட்டின் கலாசாரம், இலக்கியத்தை பிறர் அறிந்துகொள்ள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கி வருகிறார். 

விக்ரோம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஆறாயிரம் ஏக்கர்களில் தொழில்நுட்ப பூங்காக்களை கட்டியுள்ளார். 


''நான் எனது வாழ்க்கையை ஜீரோவில் இருந்துதான் தொடங்கினேன். என்னிடமும் ஏதுமில்லை. பிறருக்கு கொடுக்கவும் ஏதுமில்லை. இன்று புதிய விஷயங்களை உருவாக்கி மதிப்பான பொருட்களை சமூகத்திற்கு அளிக்க முயல்கிறேன். என்னுடைய ஊக்கமெல்லாம் சிறுவயது வாழ்க்கையில் இருந்து பெற்றதுதான்'' என விக்ரோம் கூறினார். 


பிஷானு புரோம்சன்யா


கே பி சிங்

தலைவர், டிஎல்எஃப்

வயது 92

இந்தியா


டெல்லியின் வெளிப்புறத்திலுள்ள குருகிராமை பரபரப்பான நகரமாக்கிய பெருமை கொண்ட நிறுவனம் டிஎல்எஃப். இன்று அந்த இடத்தில்தான் ஏராளமான தொழில்நுட்ப, தகவல்தொடர்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 1946ஆம் ஆண்டு, தனது மாமனாருடன் சேர்ந்து தொடங்கிய கட்டுமான நிறுவனம், டிஎல்எஃப். பல்லாண்டுகளாக அதன் தலைவராக இருந்தவர், 2020ஆம் ஆண்டு தன் பொறுப்புகளிலிருந்து விலகிக்கொண்டார். நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளை விற்று 89 மில்லியன் டாலர்களை திரட்டி தனது பெயரில் இயங்கி வரும் மூன்று அறக்கட்டளைகளுக்கு வழங்கினார். ஆக்கப்பூர்வமான நேர்மறை மாற்றங்களுக்கு நிதியை பயன்படுத்துவதாக அறக்கட்டளை வலைத்தள தகவல் கூறுகிறது. 

-அனுராதா ரகுநாதன்


லோ டக் க்வாங்க்


நிறுவனர், தலைவர் 


பாயன் ரிசோர்சஸ்


வயது 75


இந்தோனேசியா, சிங்கப்பூர், ஆசியாவிலுள்ள மக்களுக்கு தேவையான கொள்கைகளை உருவாக்க தனது நிதியை பயன்படுத்தி வருகிறார் க்வாங்க். இவரது மகள் அறக்கட்டளையைக் கவனித்துக்கொள்ளும் தலைவராக உள்ளார். இவரும் பொதுக்கொள்கையை பாடமாக படித்து பட்டம் பெற்றவர்தான். பாயன் ரிசோர்சஸ் நிறுவனம், நிலக்கரி சுரங்கங்களை மேலாண்மை செய்து வருகிறது. இதன் மதிப்பு 27.2 மில்லியன். 2021ஆம் ஆண்டு, 3.2 மில்லியன் டாலர்களை இந்தோனேசியா பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்கினார். நிலக்கரி சுரங்கம் அருகே பிடிபடும் வனவிலங்குகளை பிடித்து பாதுகாக்க தனியாக வனவிலங்கு காட்சி சாலையை ஒன்றையும் நடத்தி வருகிறார் க்வாங்க்.


-யெஸார் ரோசன்டார்



க்வெக் லெங்க் பெங்க்

வயது 82

தலைவர், சிட்டி டெவலப்மென்ட்

சிங்கப்பூர்


பெங்க், ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஃப் டெக்னாலஜி (எஸ்ஐடி)என்ற கல்வி அமைப்புடன் சேர்ந்து 17.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கட்டுமான பணிகளை செய்ய உள்ளார். ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தை கட்டுவதற்காக அறுபது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியில் உள்ள புங்கோலில் கட்டுமானம் நடைபெறவிருக்கிறது. 


எஸ்ஐடி மாணவர்களுக்கு அதிக அளவிலான கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறார். இவரது முதல் ஹோட்டல் சிங்கப்பூரில் உள்ள ஹாவ்லாக் சாலையில் அமைந்துள்ளது. உலகம் முழுக்க சிட்டி டெவலப்மென்ட் நிறுவனத்திற்கு 155 ஹோட்டல்கள் உரிமையாக உள்ளது. உலகம் முழுக்க புகழ்பெற்ற அலுவலக கட்டிடங்களையும் கட்டி வருகிறார்கள். சிங்கப்பூரில் உள்ள ரிபப்ளிக் பிளாசா கட்டிடம் இந்த வகையில் பெரும் புகழ்பெற்ற ஒன்று. 


-ஜொனாதன் பர்கோஸ்

கருத்துகள்