பெற்றோர்கள் இல்லாமல் தனியாக கம்யூனிட்டியாக குழந்தைகள் வளர்ந்தால்....

 






ரஷ்ய உளவியலாளர் லெவ் வைகோட்ஸ்கி, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போது அனுபவித்த சம்பவங்களை, நிகழ்ச்சிகளை அறிய புரிந்துகொள்ள நினைத்தார். கலாசாரம், அந்தரங்க ரீதியாக, தனிநபர் ரீதியாக மனிதர்கள் உள்ளனர். நாம் நாமாக இருப்பது பிறரின் வழியாகத்தான் நடைபெறுகிறது என்று லெவ் கருதினார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவர்கள், குழந்தைகளின் மூதாதையர் ஆகியோரின் வழியாகவே குழந்தைகளின் அறிவு, மதிப்பீடு, தொழில்நுட்ப அறிவு வளருகிறது. ஒருவர் தன்னுடைய சிந்தனையை, கருத்தை சமூகத்தின் பல்வேறு சூழ்நிலைகளை சந்திப்பதன் வழியாக புரிந்துகொள்கிறார். தன்னை திருத்தி, மேம்படுத்திக்கொள்கிறார். லெவ், ஒருவரின் மனதில் ஒரே நேரத்தில் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது என்று கருதுகிறார். ஆசிரியர், மாணவர்களை வழிநடத்தி அவர்கள் புதிய திறன்களைக் கற்க உதவி அவர்களை சிறந்த திறமை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். லெவின் கருத்துகள் காரணமாக மாணவர்களை மையப்பொருளாக கொண்ட கல்விமுறை, பாடமுறை சார்ந்ததாக மாறியது. ஆசிரியர், மாணவர் என இருவரும் சேரந்து உழைத்து கற்பதாக கல்விமுறையில் இயல்புகள் மாறின. 


lev vygotsky


2


bruno bettelhem



1964ஆம் ஆண்டு, பெட்டில்காம், இஸ்ரேல் நாட்டில் உள்ள கிப்புட்ஸ் எனும் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு சென்றார். இங்கு, குழந்தைகளுக்கென தனி சிறப்பு இல்லங்கள் உண்டு. இவர்களை பராமரிக்க அருகில் இவர்களோடு பெற்றோர்கள் இல்லை. அவர்கள் தனியாக இருந்தனர். குழந்தைகள் அனைவரும் கம்யூனிட்டி போல இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது வாழ்க்கையை பெட்டில்ஹெம் சில வாரங்கள் கவனித்து ஆராய்ந்தார். 


1967ஆம் ஆண்டு, தி சில்ட்ரன் ஆஃப் தி ட்ரீம் என்ற நூலை எழுதினார். இதில், கிப்புட்ஸ் சிறுவர் இல்லத்தில் தான் பார்த்த விஷயங்களை விளக்கி எழுதினார். குழந்தைகள் ஒன்றாக வாழ்வது சமூக வாழ்க்கையை எளிதாக மாற்றுகிறது என்று தனது கருத்தை கூறினார். இனக்குழுவினர் போல குழந்தைகள் வாழ்வது தொழில்ரீதியாக அவர்களுக்கு உதவுகிறது என தொண்ணூறுகளில் தகவல்களை கண்டறிந்து கூறினார். அமெரிக்காவில் குழந்தைகளை பாதுகாக்கும் முறை, தனது ஆராய்ச்சி வழியாக மாறும் என பெட்டில்ஹெம் நம்பினார். 




கருத்துகள்