இடுகைகள்

மெக்கானிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட இந்திய வணிகரிடமிருந்து நூறு கோடு கள்ளப்பணத்தை கொள்ளையடிக்க துடிக்கும் நால்வர்!

படம்
      நூறு கோடி தெலுங்கு சேட்டன் குமார், ராகுல், ஏமிஎலா இயக்கம் விராட் சக்ரவர்த்தி இசை சாய் கார்த்திக் பணமதிப்புநீக்கத்தை அடிப்படையாக வைத்து நிறைய கிரைம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் நூறு கோடி. மற்றபடி படத்தில் சொல்வதற்கு வேறு எந்த சிறப்பான விஷயங்களுமில்லை. வட இந்திய வணிகர் பெரும் சொத்துக்காரர். ஆள் கருப்பாக இருக்கிறார். அவரை சேட்டு என்கிறார்கள். பட்ஜெட் காரணமாக சேட்டை தென்னிந்தியாவிலேயே பிடித்துவிட்டார்கள் போல. அவருக்கு ஓரிரவில் திடீரென பினாமியிடமிருந்து போன். வருமான வரித்துறை ரெய்டுக்கு வருகிறார்கள் என. இதனால், அவர் ரகசியமாக சுவற்றில் ஒளித்து வைத்திருந்த பணத்தை சுத்தி வைத்து உடைத்து திறந்து நூறுகோடி பணத்தை எடுத்து அதை கோணிப்பையில் கட்டி வேறு இடத்திற்கு மாற்ற முனைகிறார். அப்படி மாற்ற முயலும்போது, அவரது பணம் திடீரென வைத்த இடத்தில் இருந்து காணாமல் போகிறது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோகிறார். கொலைப்பழி அவரது இளம்காதலி மீது விழுகிறது. காதலி அங்கிருந்து தனது தோழி வீட்டுக்கு தப்பியோடுகிறார். இளம் காதலி, சேட்டின் பினாமி, போலீஸ் இ...

அமைதியான மெக்கானிக்கை அடங்காதவனாக மாற்றும் தங்கை பாசம்! - அசோக் - சுரேந்தர் ரெட்டி

படம்
      Director: Surender Reddy Produced by: Valluripalli Ramesh Writer(s): Surender Reddy, Vakkantham Vamsi, Gopimohan  அசோக் 2006 சுரேந்தர் ரெட்டியின் படம். இவர் முதலில் உருவாக்கிய படம் அதனொக்கடே. இதுதான் தமிழில் ஆதி என விஜய் நடிப்பில் வெளியானது.  அசோக் படத்தின் முதல் காட்சியே சண்டைதான். ஜூனியர் என்டிஆர் வில்லன்களை புரட்டி எடுக்கிறார். அதேநேரத்தில் போலீஸ்கார ர்களை கூட்டிக்கொண்டு பிரகாஷ்ராஜ் வருகிறார். அவர் வரும்போது அவரது வீட்டுக்கு வந்த ரவுடிகள் எலும்புகள் நொறுங்கி கிடக்கிறார்கள்.  ஜூனியர் என்டிஆர் யார், பிரகாஷ்ராஜூவுக்கும் அவருக்கும் என்ன உறவு என்பது படத்தின் நெகிழ்ச்சியான கதை.  மெக்கானிக்காக வேலை செய்யும் என்டிஆர் எப்போதும் நண்பர்களுடன்தான் இருக்கிறார். ராஜீவ்தான் அவருக்கு நெருக்கமான தோஸ்த். கோபப்படும்போதெல்லாம் ஆற்றுப்படுத்தும் நண்பன். அப்பா வீட்டை விட்டு விரட்டுவதால் நண்பர்களுடன் தங்கியிருக்கும் என்டிஆர்,  குடும்பத்துடன் சேர்வதையே முக்கியமாக நினைக்கிறார். அதேசமயம் ஜாலியாக ஆடிப்பாடுபவர் அங்கு சமீராவை பார்க்கிறார். பார்த்தவுடனே மனம் ஓகே சொல்ல ...