இடுகைகள்

தரகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டரீதியான பிரச்னைகள்!

படம்
          சட்டவிரோத தத்தெடுப்பும் , பிரச்னைகளும் பொதுவாக இந்திய சமூகத்தில் திருமணம் என்பது முக்கியமானது . அதுதான் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரத்தை தருகிறது . மகன் , மகள் பிறக்கும்போது அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுகிறது . மரணத்தில் கூட ஒருவருக்கான சடங்குகளை அவரின் ரத்த வழிகளைச் சேர்ந்தவர்தான் செய்யவேண்டும் என்பதுதான் இந்து மத நம்பிக்கை . திருமணமான பெண்கள் , கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மெல்ல சித்திரவதைகள் தொடங்கும் . மலடி என்று அழைப்பதோடு , அந்த பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்ளவேண்டுமென கூறுவதும் தொடங்கும் . இதற்கும் மேலாக இப்படி குழந்தை பெறாத பெண்களை சமூக புறக்கணிப்பு செய்து விழாக்களில் தவிர்ப்பதும் இயல்பாக நடக்கிறது . இதனை பெரும்பாலும் பெண்களே வன்மத்துடன் செய்கிறார்கள் . சட்டரீதியான தத்தெடுப்பு என்பதை பெற்றோர் பலரும் ஏற்காமல் அவசரப்படுகிறார்கள் . இதனால் தரகர்கள் உள்ளே புகுந்து சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க உதவுகின்றனர் . முதலில் இதற்கென தனியாக தொகையை வாங்குபவர்கள் பின்னர் , பெற்றோரின் சென்டிமெண்ட்டை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொக

என்ஜிஓக்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து விற்கிறார்கள்?

படம்
          குழந்தைகள் விற்பனை - என்ஜிஓக்களின் தில்லுமுல்லு கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி , தமிழ்நாட்டில் 295 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அரசு அறிவித்தது . அதில் கூடுதலாக இரு குழந்தைகள் பின்னர் இணைந்தனர் . இவர்கள் இருவரும் , இதயம் டிரஸ்ட் எனும் என்ஜிஓ மூலம் கோவிட் காரணமாக இறந்துபோனதாக கணக்கு காட்டப்பட்டு தத்து எடுக்க்ப்பட்டு காசுக்கு விற்கப்பட்டனர் . இதயம் டிரஸ்டின் நிறுவனரான ஜி . ஆர் . சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு முக்கியமான காரணம் . இந்த அமைப்பு , மாநில அரசின் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது . காவல்துறையோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது . தங்களது செல்வாக்கை திறமையாக பயன்படுத்திக்கொண்டு முகமூடியுடன் ஆதரவில்லாத குழந்தைகளை விற்பனை செய்துவந்திருக்கிறது . மதுரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இதயம் டிரஸ்ட் , பல்வேறு பணிகளை செய்துவந்துள்ளது . இந்த விவகாரம் வெளிவந்தவுடன் பிற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன . மதுரையில் மாநில அரசுக்கு சொந்தமான காப்பகம் ஒன்றும் , மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் காப்பகம் ஒன்றும் உள்ளது . இவையன

சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்

படம்
                சௌகதா ரே திரிணாமூல் காங்கிரஸ் சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ? இல்லை . அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் . அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு . போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு . அவருக்கு இது தெரியாதா ? தெரிந்திருக்கலாம் . அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு . அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார் . உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர் . அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார் . மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல . எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது . அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை . ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள் . இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா ? இவர்கள் யாரும் இத்தேர்தல