இடுகைகள்

காரென் ஹார்னி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களைப் பற்றிய கருத்துகளை வலிந்து உருவாக்கும் சமூகம்!

படம்
  பள்ளி, கல்லூரி, சமூகம், குடும்பம், இணையம் என பார்த்தால் ஒருவரின் மனதிலுள்ள கருத்தை எந்த அம்சம் உருவாக்குகிறது என கண்டுபிடித்துவிடலாம். இன்றைய காலத்தில் இணையம் குறிப்பிட்ட கருத்துகளை வலிந்து உருவாக்குகிறது. அதை வைத்து சமூகத்தில் உள்ள ஒருவரை எளிதாக அவதூறு செய்து கீழிறக்கமுடியும். குடும்பம், அலுவலகம், இணையம் ஆகிய இடங்களில் இதுபோல நச்சை உருவாக்குகிற இயல்பு கொண்ட மனிதர்களை ஒருவர் எளிதாக சந்திக்கலாம். இந்த மனிதர்கள் தனக்கு அங்கீகாரமும் , அதிகாரமும் வேண்டும் என பேராசை கொண்டிருப்பார்கள். அதை அடைய பல்வேறு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்வார்கள். தன்னை மட்டுமே மையப்படுத்திய சிந்தனை கொண்டவர்கள், நடைமுறை பிரச்னையில் தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் நச்சு பிரசாரங்களை செய்வார்கள். தங்களின் தகுதியின்மை, திறனின்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அவர்களும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.  வரலாற்றில் மிக மோசமான நேரத்தில் பணவீக்கம் வருகிறது, வருமானம் போதவில்லை எனும்போது ஒருவர் பொன்னியின் செல்வன் நூலை எடுத்து வைத்து படித்து கனவில் ஆழ்வதைப் போன்ற குணம் மனிதர்களுக்கு உண்டு. அன்றைய காலத்தை நினைத்து