இடுகைகள்

ரஜ்னீஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எது எப்படியோ அப்படியே.... நடந்தது - மா ஆனந்த் ஷீலா -

படம்
         மா ஷீலா   இந்தியாவிலுள்ள புனேவில் பிறந்த ரஜ்னீஷ் எனும் ஓஷோவை யாரும் மறக்க முடியாது . அவர் 1981 இல் அமெரிக்காவின் ஒரேகான் நகருக்கு செல்ல விரும்பினார் . இதற்கு பின்னணியில் அவரது உதவியாளர் மா ஆனந்த் ஷீலா இருந்தார் . இவர் அங்கு ரஜ்னீஷ்புரத்தை உருவாக்கினார் . பின்னாளில் பல்வேறு புகார்கள் குவிய , ஷீலாவுக்கு சிறைதண்டனை கிடைத்தது . அதிலிருந்து மீண்டு தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார் . இவரைப் பற்றி நெட்பிளிக்சில் சர்ச்சிங் ஷீலா என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார் ஷீலா . அவரிடம் பேசினோம் . இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வரும் நோக்கம் என்ன ? இறைவனின் விருப்பம் என்று கூறலாம் . இதற்கு முன்னரும் நான் நிறைய முறை இந்தியாவுக்கு வர விரு்ம்பினேன் . குஜராத் அல்லது பரோடாவுக்கு செல்ல மட்டும் விரும்பவில்லை . எனது வேருக்கு நான் செல்ல விரும்பினேன் . இதை சொல்வது வேடிக்கையாக இருக்கலாம் . இதனை நீங்கள் ஆவணப்படத்தில் பார்ப்பீர்கள் . இங்கு சந்தித்த மனிதர்கள் சுவிட்சர்லாந்தில் சந்தித்த மனிதர்களை விட வேறுபட்