இடுகைகள்

தொழிற்சாலை - போயிங் விமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போயிங் விமானம் எங்கு உருவாகிறது தெரியுமா?

படம்
பிரமாண்ட போயிங் தொழிற்சாலை! போயிங் 747 விமானத்தின் பிரமாண்டத்தை அறிந்திருப்பீர்கள். அதனை உருவாக்கும் தொழிற்சாலை மட்டும் சிறியதாகவா இருக்கும்? அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள எவரெட் போயிங் தொழிற்சாலை அப்படி ஒரு பிரமாண்டத்தைக் கொண்டது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸிலுள்ள எவரெட் தொழிற்சாலை உலகிலேயே மிக பிரமாண்டமான தொழிற்சாலை என கின்னஸில் இடம்பிடித்து புகழ்பெற்றது. 1967 ஆம் ஆண்டு போயிங் நிறுவனத் தலைவரான பில் ஆலன், 400 பயணிகள் பயணிக்கும்படியான பெரிய விமானத்தை தயாரிக்க விரும்பினார். அதற்கு தேவையான இடத்தை வுட்லேண்டு பகுதியில் விமானநிலையத்தின் அருகில் கண்டுபிடித்தார். ரயில்வசதி இல்லாத இடத்தில் நெடுஞ்சாலையை அடைவதற்கான சிறிய சாலை மட்டுமே உண்டு.  60.6217 ச.அடி பரப்பில்(தலைமைக் கட்டிடத்தின் அளவு 97.8 ஏக்கர்கள்) பிரமாண்டமாக உருவான தொழிற்சாலையில் 767,777,787 எனும் சிறியரக விமானங்களோடு ஜம்போ விமானங்களும் தயாராகின்றன. இருபத்து நான்கு மணிநேரமும் வேலை நடைபெறும் தொழிற்சாலையில் ஒரு ஷிப்டிற்கு 10 ஆயிரம் தொழிலாளர்கள்  பணிபுரிகின்றனர். வாட்டிகன், டிஸ்னிலேண்டைப் போல போயிங் தொழிற்சாலையும் சுற்றிப்ப