இடுகைகள்

மருத்துவம்- அரசு நிதி ஒதுக்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா பொதுமருத்துவத்திற்கு செலவழிப்பது எவ்வளவு தெரியுமா?

படம்
அறிவோம் தெளிவோம் ! இந்திய அரசு பொதுசுகாதாரத்திற்கு மக்கள் ஒருவருக்கு ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை ரூ .1,112. மாதத்திற்கு ரூ .93, தினசரி ரூ .3 என கணக்கு வருகிறது .   இது தனியார் மருத்துவமனைகளில் பெறும் ஆலோசனைக் கட்டணத்தைவிட குறைவு . 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தியில் 1.02% ஆக உள்ள மருத்துவ சிகிச்சைதொகை மாறவேயில்லை . மிக குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட நாடுகள் கூட 1.4% மருத்துவத்திற்காக செலவழித்து வருகின்றனர் என்ற உண்மையை சுகாதாரம் குடும்பநலத்துறை அமைச்சர் ஜே . பி நட்டா வெளியிட்ட அறிக்கை ( ஜூன் 19,2018) தகவல் கூறுகிறது . இந்தியாவை விட இலங்கை 4 மடங்கும் (1.6%), இந்தோனேஷியா 2 மடங்கும் பொதுமருத்துவத்திற்காக செலவு செய்கின்றன .  2025 ஆம் ஆண்டு ஜிடிபியில் 2.5%( தேசிய சுகாதாரக்கொள்கை 2017) என இலக்கு வைத்துள்ள இந்திய அரசு , 2010 ஆம் ஆண்டு இலக்கான 2 சதவிகிதத்தையே எட்ட முடியாதது வேதனை . மாநில அரசுகளில் மிசோரம் தனிநபருக்கு ரூ .5,862 செலவிடுகிறது . இது மத்தியஅரசின் அளவைவிட 4 மடங்கு அதிகம் . அருணாசலப்பிரதேசம் - ரூ .5,177, மத்தியப்பிரதேசம்