இடுகைகள்

சினிமா - இயற்பியல் திரைப்படங்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்பியல் தத்துவங்களை சொன்ன சினிமா!

படம்
இயற்பியல் சினிமா! 2001: A Space Odyssey (1968) இன்றைய விண்வெளி அறிவியல் படங்களுக்கு குரு, இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் அன்றே எடுத்த ஸ்பேஸ் ஒடிசி திரைப்படம்தான். சிஜியில் அக்காலகட்டத்தில் அசத்திய படம், அதற்காக அகாடமி விருதும் வென்றது. எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க்கின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் விண்வெளியில் வியாழன் கோளிற்கு செல்லும் பயணம் குறித்தது.   Gravity (2013) விண்வெளியில் ஆராய்ச்சிமையத்தின் பழுது நீக்கச்சென்ற சான்ட்ரா அங்குள்ள பிரச்னைகளை சமாளித்து எப்படி பூமி மீள்கிறார் என்பதே கதை. ஒலி, ஒளி என பார்வையாளர்களை வசீகரித்த விண்வெளிப்படம் இது. The Theory of Everything (2014) வானியல் தியரிகளுக்கு விளக்கம் சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வை விவரிக்கும் சினிமா. ஸ்டீபனின் முதல் மனைவியின் வாழ்வைச் சொல்லும் கதையில் பல்வேறு இயற்பியல் தியரிகளையும் விளக்கியிருப்பார்கள். The Martian (2015) எழுத்தாளர் ஆன்டி வெய்ர் எழுதிய நாவலை தழுவிய சினிமா. செவ்வாயில் காயம்பட்டு தனிமைப்பட்ட விண்வெளிவீரரின் கதை. அறிவியலை ஓரளவு உண்மையுடன் அணுகிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று