இடுகைகள்

சுற்றுச்சுவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி