இடுகைகள்

எல்லை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் சிந்தனைகளை எண்ணவோட்டங்களை அறிய உதவும் கட்டுரை நூல்!

படம்
           கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் கட்டுரை நூல் ஆசிரியர்: மு.இராமனாதன் ♦ ♦ முதல் பதிப்பு: டிசம்பர் 2022 ♦ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001 இந்த கட்டுரை நூல் மொத்தம் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதன் வழியாக சீனா, ஹாங்காங், மியான்மர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சீனாவில் தணிக்கை முறை அமலில் உள்ளதால், அதைப்பற்றிய கட்டுரைகள் அங்குள்ள சமூக சூழல், அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் அமெரிக்கா, மியான்மர், ஹாங்காங்கை விட சீனாவைப் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்த்தவையாக இருந்தன. இந்தியாவும் சீனாவும் ஒரே ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றன என்றாலும் சீனா இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உயர்ந்துவிட்டது இதை அமெரிக்கா ஏற்கிறது ஏற்காமல் போகிறது என்பது விஷயமல்ல. பல்வேறு தடைகள் இருந்தாலும் உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்