இடுகைகள்

சமீரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!

படம்
              ஜெய் சிரஞ்சீவா சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி     தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.  படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.  தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்

அமைதியான மெக்கானிக்கை அடங்காதவனாக மாற்றும் தங்கை பாசம்! - அசோக் - சுரேந்தர் ரெட்டி

படம்
      Director: Surender Reddy Produced by: Valluripalli Ramesh Writer(s): Surender Reddy, Vakkantham Vamsi, Gopimohan  அசோக் 2006 சுரேந்தர் ரெட்டியின் படம். இவர் முதலில் உருவாக்கிய படம் அதனொக்கடே. இதுதான் தமிழில் ஆதி என விஜய் நடிப்பில் வெளியானது.  அசோக் படத்தின் முதல் காட்சியே சண்டைதான். ஜூனியர் என்டிஆர் வில்லன்களை புரட்டி எடுக்கிறார். அதேநேரத்தில் போலீஸ்கார ர்களை கூட்டிக்கொண்டு பிரகாஷ்ராஜ் வருகிறார். அவர் வரும்போது அவரது வீட்டுக்கு வந்த ரவுடிகள் எலும்புகள் நொறுங்கி கிடக்கிறார்கள்.  ஜூனியர் என்டிஆர் யார், பிரகாஷ்ராஜூவுக்கும் அவருக்கும் என்ன உறவு என்பது படத்தின் நெகிழ்ச்சியான கதை.  மெக்கானிக்காக வேலை செய்யும் என்டிஆர் எப்போதும் நண்பர்களுடன்தான் இருக்கிறார். ராஜீவ்தான் அவருக்கு நெருக்கமான தோஸ்த். கோபப்படும்போதெல்லாம் ஆற்றுப்படுத்தும் நண்பன். அப்பா வீட்டை விட்டு விரட்டுவதால் நண்பர்களுடன் தங்கியிருக்கும் என்டிஆர்,  குடும்பத்துடன் சேர்வதையே முக்கியமாக நினைக்கிறார். அதேசமயம் ஜாலியாக ஆடிப்பாடுபவர் அங்கு சமீராவை பார்க்கிறார். பார்த்தவுடனே மனம் ஓகே சொல்ல ஐ லவ்யூ சொல்லிவிட்டு வந்துவிடுகிறார். ப

பாலியல் வல்லுறவுக்குள்ளான தங்கைக்கு நியாயம் தேடி நகரம் வரும் கிராமத்து மனிதனின் வாழ்க்கை! - நரசிம்முடு

படம்
                  நரசிம்முடு    Director: B. Gopal Produced by: Chengala Venkat Rao Writer(s): P. Ravi Shankar பஸ்ஸில் ஜெயசித்ராவின் பெண்ணை கல்லூரி மாணவர்கள் மானபங்கம் படுத்த முயல்கிறார்கள் . அவர்களை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பெயர்க்கிறார் என்டிஆர் ஜூர் . ஆனால் ஒரு வார்த்தை பேசுவதில்லை . முழுக்க அடிதான் . பதினைந்து பேர்களை அடித்து நொறுக்கி புத்தூர் கட்டு போட வைத்ததிற்காக அவரை போலீசார் கைது செய்கிறார்கள் . அங்கு வரும் ஆசிஷ் வித்யார்த்தி ( கமிஷனர் ) என்டிஆரைப் பார்த்து எரிச்சலாகி விசாரணை செய்ய முயல்கிறார் . ஆனால் என்டிஆருக்கு பேச்சு வராது ஊமை என்று சொல்ல ஆசிஷ் அமைதியாகிறார் . என்டிஆரின் கண்களை மட்டும் அவரால் மறக்கவே முடியவில்லை . என்டிஆரை , ஜெயசித்ரா தான் வாழும் காலனிக்கே கூட்டி வருகிறார் . கொண்டுவீடு எனும் கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு என்டிஆர் எதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் பிளாஷ்பேக் கதை .    இந்த படத்தில் வரும் ரேஷன் கார்டில் என்டிஆர் பெயரை அவரது மொத்த கிராமமுமே சேர்த்திருக்கிறார்கள் . இக்காட்சியை அப்படியே சுட்டு எங்கள் ஆசான் படத்தில் வைத்திரு