இடுகைகள்

பொருட்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!

படம்
  பற்களை துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம் அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா? இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி, கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன. கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே இல்லை. 1.பிரச்னையை அடையாளம் கண்டு கூறவேண்டும் 2.அதை மிகப்பெரியதாக்கி பதற்றம் ஏற்படுத்தவேண்டும் 3. தீர்வைக் கூறவேண்டும் பற்பசை விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள், ப

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட

பொருட்களின் அளவு கண்களைப் பொறுத்து மாறுமா?

படம்
மிஸ்டர் ரோனி இருகண்களில் ஒன்று பழுதாகிவிட்டால், மற்றொன்று மூலம் பொருட்களை எளிதாக பார்க்கலாமா? பொருட்களின் அளவு பற்றி நம் நினைவில் ஏற்கனவே சில வரையறைகள் இருக்கும். எனவே, நீங்கள் ஒற்றைக் கண்ணில் பொருளைப் பார்க்கும்போது அதற்கேற்ப மூளை தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த தன்மையை பைனாகுலர் டிஸ்பாரிட்டி என்று குறிப்பிடுகிறார்கள். சாதாரணமாக ஒற்றைக்கண்ணை மூடி மற்றொரு கண்ணில் ஓர் பொருளைப் பார்க்கும்போது, அதில் வேறுபாடுகள் தெரியும். ரயில்வே பாதைகளைப் பார்த்தால் நமக்குத் தெரிவது மோஷன் பாரலாக்ஸ் எனும் தன்மை. நீண்ட தூரத்திற்கு ஒன்றுபோலவே இருப்புப் பாதைகள் தெரியும். நன்றி- பிபிசி

சூப்பர்ஸ்டோர் என்றால் என்ன பொருள் தெரியுமா?

படம்
காய்கறிக்கடை Vs சிறப்பங்காடி என்ன வேறுபாடு உள்ளது? இன்று இதுபோல நிறைய வேறுபாடுகள் உண்டு. இன்று மருந்தகங்களில் பல்பொருள் அங்காடியில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை விற்கத்தொடங்கிவிட்டனர். என்ன காரணம்? மக்களின் தேவை அப்படி உள்ளது. காய்கறிக்கடையிலும் இன்று குளிர்பானங்கள், பழச்சாறு, பருப்புகள் விற்கத்தொடங்கிவிட்டனர். சிறப்பங்காடி என்பது, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், வீட்டைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள் ஆகியவை இருக்கும். இதில் சூப்பர்ஸ்டோர் என்பது நீங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கான அனைத்து பொருட்களும் இருக்கும். ஏறத்தாழ வீட்டைக் கட்டுவதற்கான பொருட்களும் கூட இங்கு விற்கப்படும். இன்று ஹைபர் மார்க்கெட்டுகள் மளிகை, காய்கறி, இறைச்சி பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்குகள், துணிகள், செருப்புகள் நோட்டுபுத்தகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு என அனைத்துமே இங்கு இருக்கும். காய்கறிக்கடை என்பது தினசரி பயன்பாட்டிற்கானது. ஆனால் சூப்பர் ஸ்டோர் என்பது சிறப்பங்காடிகளைவிட அளவில், பொருட்களின் எண்ணிக்கையிலும் பெரிது. நன்றி: மென்டல் ஃபிளாஸ்