இடுகைகள்

அறிவியல்-இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பைடு சீனாவில் வென்றது இப்படித்தான்!

படம்
இன்டர்நெட் காட்ஃபாதர் ராபின்லீ ! - ச . அன்பரசு 1992 ஆம் ஆண்டு . அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படிக்க இன்டர்வியூவில் பதட்டமாக உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர் . பேராசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் . " சீனாவில் கம்ப்யூட்டர்கள் உள்ளதா ?" பதில் பேச முடியாமல் திகைத்துப்போன அந்த இளைஞர் தன் பெயரை சீனாவின் மூலை முடுக்கெங்கும் பேச வைத்துவிட்டார் . பைடு சர்ச் எஞ்சின் நிறுவனர் ராபின் லீதான் அந்த இளைஞர் . " கம்ப்யூட்டர் துறையில் சீனா வலிமையான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தவேண்டும் என நினைத்தேன் " என எளிமையாக புன்னகைப்பவருக்கு வயது 49. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பைடு சர்ச் எஞ்சினைத் தொடங்கி சீனாவில் 80% பங்குகளோடு உலகில் மிகபிரபலமான நான்காவது வெப்சைட்டாக உயர்த்தியுள்ளார் ராபின் லீ .  சர்ச் எஞ்சினின் பெயர் , 13 ஆம் நூற்றாண்டு கவிதையிலிருந்து பெறப்பட்டது . சீனாவில் இன்று 262 டெக் நிறுவனங்கள் ( அ ) ஒரு பில்லியன் மதிப்புள்ள ஸ்டார்ட் அப்கள் உள்ளன என்கிறது மெக்கின்சி நிறுவன அறிக்கை . பீகிங் பல்கலையில் தகவல் மேலாண்மை படித்தவர் , அமெரிக்கா