இடுகைகள்

இடம்பெயரும் தொழிலாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை பெருந்தொற்று காலத்தில் தந்திரமாக அமல்படுத்துகிறது அரசு!

படம்
இந்தியன்எக்ஸ்பிரஸ் தமிழ் இந்தியாவின் முக்கியமான வணிக அமைப்பு, அகில இந்திய வணிகர் சங்கம்(AITUC). இதன் பொதுச்செயலாளரான அமர்ஜீத் கௌர் அவர்களுடன் வேலைவாய்ப்புகள், தொழிலாளர்கள், நிறுவனங்களின் நிலை ஆகியவற்றைப் பற்றி உரையாடினோம். பெருந்தொற்று காலத்தில் வேலைவாய்ப்புகள், உயிர்பிழைத்திருத்தல் என பல்வேறு விஷயங்களே கடினமாக இருக்கிறதே? இதில் எப்படி வேலைகளுக்கான பாதுகாப்பை நாம் கோருவது? கடினம்தான். நாம் இந்த நேரத்தில் பாதிப்புக்கு காரணமாக அரசியல், மதம், இனம் ஆகியவற்றை பிடித்துக்கொண்டிருக்க கூடாது. சமூகத்தின் இழைகளை பலப்படுத்துவதுதான் இப்போதைய தேவை. தொழிலாளர்கள் 150 ஆண்டுகளாக போராடித்தான் தொழிலாளர்கள் சட்டம், ஓய்வூதிய நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. தற்போதைய காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள், வணிக சங்கங்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்று பல்வேறு துறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒருங்கிணைவது முக்கியம். இம்முறையில் ஒரு துறைக்கு ஒரே ஒரு சங்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும்போது, கேள்விகள

இடம்பெயர் தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக இந்திய அரசு நடத்தியுள்ளது! அஷ்வானி குமார்

படம்
பிக்ஸாபே அஷ்வானி குமார்,  அரசியல் ஆய்வாளர் மைக்ரேஷன் அண்ட் மொபிலிட்டி என்ற இவரது நூல் விரைவில் வெளியாக உள்ளது. இடம்பெயர் தொழிலாளர்கள், அவர்களின் நிலைமை, 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இடம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார் அஷ்வானி குமார். கோவிட் -19 நோய்த்தொற்று வரலாற்றுரீதியாக மனிதர்களின் இறப்பு தாண்டி இடம்பெயர் தொழிலாளர்கள் நம் கண்முன் ஆதரவற்று நடந்து தம் ஊர்களுக்கு செல்வதைப் பார்த்தோம். இதுபற்றி தங்கள் கருத்து? அழகிய நகரங்களை பல்வேறு மாநிலங்களில் உருவாக்கிய மக்கள் அங்கு வாக்களிக்க உரிமையில்லை. குடியிருக்க சொந்தமாக வீடில்லை என்பது பெரும் சமூக அவலம். அவர்களை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மக்கள் என அனைவரும் கைவிட்டதை நம் கண்கூடாக பார்த்தோம். மத்திய அரசு அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதியே திற்கு காரணம். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 37 சதவீத (450 மில்லியன்)மக்கள் இடம்பெயர் தொழிலாளர்களாக பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகின்றன்ர. இவர்களில் 30 சதவீதம் பேர் 15-29 வயதிற்குள்ளான இளைஞர்கள். 15 மில்லியன் பேர் குழந்தைகள் ஆவர். பெண்கள் பெரும்பாலும்

இடம்பெயரும் மக்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

படம்
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பற்றி.... நேர்காணல் ரவி காந்த், செயலர், பொது விநியோகத்துறை ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு பற்றிச் சொல்லுங்கள்.  நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்புச்சட்டப்படி விரைவில் அமலாகவிருக்கிறது. இதன்படி, வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், தங்களது விரல்ரேகையை வைத்தாலே குறைந்த விலையில் அரிசி, பருப்பை பெற்று பயன்பெற முடியும். இதற்காக புதிய கார்டுகளை பெற வேண்டியதில்லை. இக்கார்டுகளை போலியாக பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்? அதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறோம். அவர்களிடம் பெறும் கைரேகை  போன்றவற்றை பயன்படுத்தி அவர் பெறும் உணவுப்பொருட்களை அளவைக் கண்காணிக்க முடியும். மத்திய தகவல் தளத்தில் எப்படி பதிவு செய்து கண்காணிப்பீர்கள்? அதற்குத்தான் பிஓஎஸ் இயந்திரம் உள்ளதே. அதன்மூலம் செய்யப்படும் உணவு ஒதுக்கீடு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பயனர் இந்தியாவில் எங்கு என்னென்ன பொருட்களை வாங்கினார் என்று அறிய முடியும். எந்தெந்த மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள்? வட