இடம்பெயர் தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக இந்திய அரசு நடத்தியுள்ளது! அஷ்வானி குமார்
பிக்ஸாபே |
அஷ்வானி குமார், அரசியல் ஆய்வாளர்
மைக்ரேஷன்
அண்ட் மொபிலிட்டி என்ற இவரது நூல் விரைவில் வெளியாக உள்ளது. இடம்பெயர் தொழிலாளர்கள்,
அவர்களின் நிலைமை, 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இடம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றைப்
பற்றி பேசுகிறார் அஷ்வானி குமார்.
கோவிட் -19 நோய்த்தொற்று வரலாற்றுரீதியாக
மனிதர்களின் இறப்பு தாண்டி இடம்பெயர் தொழிலாளர்கள் நம் கண்முன் ஆதரவற்று நடந்து தம்
ஊர்களுக்கு செல்வதைப் பார்த்தோம். இதுபற்றி தங்கள் கருத்து?
அழகிய
நகரங்களை பல்வேறு மாநிலங்களில் உருவாக்கிய மக்கள் அங்கு வாக்களிக்க உரிமையில்லை. குடியிருக்க
சொந்தமாக வீடில்லை என்பது பெரும் சமூக அவலம். அவர்களை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்,
மக்கள் என அனைவரும் கைவிட்டதை நம் கண்கூடாக பார்த்தோம். மத்திய அரசு அவர்களை இரண்டாம்
தர குடிமக்களாக கருதியே திற்கு காரணம்.
2011ஆம்
ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 37 சதவீத (450 மில்லியன்)மக்கள் இடம்பெயர் தொழிலாளர்களாக
பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகின்றன்ர. இவர்களில் 30 சதவீதம் பேர் 15-29 வயதிற்குள்ளான
இளைஞர்கள். 15 மில்லியன் பேர் குழந்தைகள் ஆவர். பெண்கள் பெரும்பாலும் வீட்டுவேலைகளை
செய்து வருகின்றனர்.
இது தொடர்பான வேறு தகவல்கள் உள்ளனவா?
இதுதொடர்பாக
பிரியா தேசிங்கர் ஆராய்ச்சி செய்துவருகிறார். அவர் அறிக்கைப்படி மூன்றில் இருபங்கு
தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு பேர் நகரங்களில்
வேலை செய்கிறார்கள். இதில் மாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வதில் ஆண்களும், மாவட்டங்களைக்
கடந்து வேலைகளைத் தேடிச்செல்வதில் பெண்களும் முன்னிலை வகிக்கின்றனர். குறிப்பிட்ட வேலை
சீசனில் மட்டும் நகரங்களுக்கு வந்து வேலை செய்துவிட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு
இடம்பெயர் தொழிலாளர்கள் வந்துவிடுகிறார்கள். இவர்கள் வேலைசெய்யுமிடத்தில் அடிப்படை
இந்தியக் குடிமகனுக்கான எந்த உரிமைகளும் வசதிகளும் கிடைப்பதில்லை. இவர்களை ஃபுட்லூஸ்
வொர்க்கர்ஸ் என்று அழைக்கின்றனர்.
இப்படி இடம்பெயர்ந்து வேலை செய்யும்
தொழிலாளர்களில் சாதி, இனம் சார்ந்து வேறுபாடுகள் உள்ளதா?
பழங்குடி
மக்கள் பிற பிற்படுத்தப்பட்டோர், தலித் ஆகிய சாதிகளை விட பெருமளவு இடம்பெயர்ந்து பணியாற்றி
வருகின்றனர். கட்டுமானத்துறை, சலூன், உணவகம், வீட்டுவேலைகள், பாதுகாவலர்கள் என பல்வேறு
வேலைகளை இடம்பெயர் தொழிலாளர்கள் ஏற்கின்றனர். ஆர்.பி.பகத் என்ற ஆய்வாளரின் அறிக்கைப்படி,
உ.பி. ம.பி, பீகார், ராஜஸ்தான், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள்
மும்பை, டில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை வேலைக்காக தேர்ந்தெடுக்கின்றனர்.
டில்லி, மும்பையில் மட்டும் 43 சதவீத இடம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். கேரளம் இந்திய
மாநிலங்களிலேயே இடம்பெயர் தொழிலாளர்களுக்கான பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ள மாநிலமாக
உள்ளது. எனவே இங்கு பணியாற்ற வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரம்,
அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து கேரளத்திற்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
யூகமாக 25 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறுகிய கால பணிகளுக்காக 80 மில்லியன்
தொழிலாளர்கள் இந்திய மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பற்றி தகவல்களை
பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேகரித்துள்ளன. 40 மில்லியன் தொழிலாளர்கள் கட்டுமானத்துறையிலும்,
20 மில்லியன் பேர் வீட்டுவேலைகளிலும், 7 மில்லியன் பேர் பாலியல் தொழிலிலும், 12 மில்லியன்
பேர் சட்டவிரோத சுரங்கப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
1979ஆம் ஆண்டு இடம்பெயர் தொழிலாளர்களுக்கான
சட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் என்ன மாற்றங்கள் நடந்தன என்று கூறமுடியுமா?
மத்திய
அரசு உருவாக்கிய இடம்பெயர் தொழிலாளர்களை முறைப்படுத்தும் சட்டம் நடைமுறையில் தோற்றுப்போன
ஒன்று. மாநில அரசுகள் இடம்பெயர் தொழிலாளர்களுக்கான கமிஷன் ஒன்றை அமைத்து, தொழிலாளர்களுக்கு
அளிக்கும் திறன் பயிற்சிகளை கண்காணித்து பதிவு செய்யவேண்டும். 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட
சட்டமும், தொழிலாளர் கமிஷனின் செயலாளருக்கு அதிகாரம் தருகிறதே தவிர தொழிலாளர்களுக்கு
அல்ல. இவர்களுக்கு எங்கு வாழ்கிறார்களே அங்கேயே வாக்களிக்கும் உரிமை கூட கிடையாது.
இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இதன்மூலம் அவர்களுக்கு சமூக மதிப்பு
கிடைக்கும் என நம்புகிறேன். நாம் இன்று ஆதார், பான் கார்டு என அனைத்தையும் டிஜிட்டல்
மூலம் செய்யும்போது இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலன்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.
பொதுவிநியோக முறையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நகரிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும்
வசதி, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டப்படி, தான் வேலைபார்க்கும் மாநிலத்தில்
தற்காலிக அரசு வேலைவாய்ப்புகளை பெறும் உரிமையும் அளிக்கப்படவேண்டும். இதன்மூலம் பெருந்தொற்று
காலத்தில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அலறியடித்துக்கொண்டு வரும் சோகம் நேராது.
இந்து
ஆங்கிலம்
கருத்துகள்
கருத்துரையிடுக