பதற்றமாக இருக்கும்போது சிரிப்பு வருவது ஏன்? மிஸ்டர் ரோனி பதில்கள்









Happy, Kids, Boys, Small, Children, Toddlers, Smiling
cc





மிஸ்டர் ரோனி

மைக்ரோ ஓவனில் வைத்தால் சூப் ஏன் வெடித்து சிதறுகிறது?

மைக்ரோ ஓவனில் சமச்சீரற்ற முறையில் வெப்பம் பரவுவதால் சூப்பில் குமிழ்கள் தோன்றி, உள்ளே வெடிக்கிறது. இதற்கு காரணம், சூப் நீர் தன்மையைக் கொண்டுள்ளதுதான். எனவே சூப்பை உள்ளே வைத்துவிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்க அமர்ந்துவிடாமல் ஐந்து நிமிடத்தில் டக்கென எடுத்துவிட்டால் மைக்ரோ ஓவனை வாஷிங்மெஷினுக்கு உள்ளே போட்டு கழுவும் அவசியம் நேராது.

கடலில் தோன்றும் அலைகள் குமிழ்களோடும் பாறைகளில் மோதி சிதறும்போதும் வெள்ளையாக தெரிவது ஏன்?

கடல் பரப்பில் உள்ள காற்று அழுத்தமே இதற்கு காரணம். மேலும் இதில் புவியின் ஈர்ப்புவிசையும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, அலைகள் உருவாகி குமிழ்கள் உருவாகிறது. வெள்ளையாக தெரிவதற்கு காரணம், வெளிச்சம் அதன் மீது செயல்படும் முறைதான்.

உடற்பயிற்சி செய்து முடிந்ததும் உடலில் வெங்காயத்தின் வாசனை வருகிறதே ஏன்?

அபோகிரைன், எக்கிரைன் என்ற இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் உடலில் உள்ளன. அபோகிரைன் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடை இடுக்கு ஆகியவற்றில் உள்ளன. இவை மனதில் பதற்றம், வலி ஆகியவை ஏற்படும் அபரிமிதமாக சுரக்கின்றன. எக்கிரைன் சுரப்பி உடல் முழுவதும் உள்ளது என்பதால், உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கிறது. எக்கிரைன் சுரப்பி சுரக்கும் வியர்வை என்பது நறுமணமற்றதுதான். ஆனால் தோலிலுள்ள பாக்டீரியாக்கள் வினைபுரியும்போதுதான் வியர்வையின் மணம் மாறுகிறது. பாக்டீரியாக்கள் தையோஆல்கஹால் எனும் வேதிப்பொருட்களை வெளியிடும்போதுதான் உடலில் வெங்காய மணம் உருவாகிறது. இதைக் கட்டுப்படுத்த நீங்கள் டியோட்ரண்டுகளைப் பயன்படுத்தலாம். வேதிப்பொருட்கள் வேண்டாம் என்றால் உடனே ஓடிப்போய் வாளியில் தண்ணீர் பிடித்து குளித்து விடுங்கள்.

பதற்றமாக இருக்கும்போது சிரிப்பு வருவது ஏன்?

சிரிப்பு அழுகை என இரண்டுமே நாம் என்ன உணர்வு நிலையில் இருக்கிறோம் என்பதை வெளியே பிறருக்கு சொல்லும் விஷயங்கள். பொதுவாக ஓரிடத்தில் அவமானம், கூச்சம் ஆகிய உணர்ச்சிகளை அனுபவிக்கும்போது, மனம் அதனை மறைக்க சிரிப்பை முகமூடியாக பயன்படுத்துகிறது. இதனால்தான் பதற்றமான இடங்களில் கூட சிலர் தம் உணர்ச்சிப் பீறிடலை மறைக்க சிரிக்கிறார்கள். சமூகரீதியான பதற்றத்தை இந்த சிரிப்பு காட்டிக்கொடுக்கிறது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்