எளிய முறையில் எழுதப்பட்ட உளவியல் நூல் ! - உளவியல் உங்களுக்காக - இராம. கார்த்திக் லெட்சுமணன்






உளவியல் உங்களுக்காக!





உளவியல் உங்களுக்காக

மருத்துவர் ராம. கார்த்திக் லெட்சுமணன்

பொதுவாக சமூகத்தில் நிறைய நம்பிக்கைகள் இருக்கும். இவை அறிவியல் சார்ந்தவை அல்ல. காலப்போக்கில் அப்படியே பலரும் நம்பி இப்போது நாமும் நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். அதுபோன்ற பல விஷயங்களை மருத்துவர் கார்த்திக் கேள்விகளைக் கேட்டுள்ளார். 

இந்நூலிலுள்ள அனைத்து கட்டுரைகளும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி எழுதியுள்ளதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். அடிப்படையில் இந்த நூல் உளவியல் என்பது என்ன என்பதை விளக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக அந்த விஷயத்தை மட்டுமே பேசாமல், பல்வேறு சமூக பிரச்னைகளைப் பேசுகிற நூல், உளவியல் சார்ந்த விஷயங்களையும் கவனப்படுத்தி பேசுகிறது. 

உளவியலில் ஆளுமை, பழக்கவழக்கங்கள், குணம் ஆகியவை முக்கியம் என்பதால் பொறியியல் மட்டுமே படிக்க வற்புறுத்துவது போன்ற கட்டுரைகள் எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது. அவை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மனச்சோர்வு, ஆளுமை பிரச்னைகள் என மருத்துவர் பேசுவது சிறப்பாக புரிந்துகொள்ள உதவுகிறது. 

புகையிலை பழக்கத்தை கைவிடு, அசெர்ட்னெஸ், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவையாக தோன்றுகின்றன. உடல்நலம் பற்றி பலரும் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றாலும் மனநலம் பற்றி வெகுஜன ஊடகங்களில் எழுதுபவர்கள் குறைவு. இந்தவகையில் உளவியல் உங்களுக்காக நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 

கோமாளிமேடை டீம் 
நன்றி: கூகுள்புக்ஸ்

கருத்துகள்