அக்கறையுடன் உணவு சமைக்க கற்றுத் தரும் சமையற்கலைஞர்! - சமின் நொஸ்ரத்
தி கார்டியன் |
சமின் நொஸ்ரத், சமையற்கலைஞர்.
சமின் எழுதிய சால்ட், ஃபேட், ஆசிட் என்ற உணவு நூல் முக்கியமானது.
இதோடு, இவரின் உணவு தயாரிப்பு பற்றிய நெட்பிளிக்ஸ் தொடரும் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
வீட்டில் அம்மா சமைப்பதைப் போன்ற எளிமையான ஆர்வமூட்டும் சமையல் குறிப்புகள் எதிர்பார்த்தது
போல மக்களால் வரவேற்கப்பட்டது. நம் குடும்பத்தில் சமையற்கலையை எப்படி கற்றோமோ அதேபோலத்தான்
சமின் தன் பாட்டி, அம்மா வழியாக சமைக்க கற்றார். அதோடு தான் பயன்படுத்தும் காய்கறி
விவசாயிகளிடமிருந்து பெறப்படுவதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்.
நமது உணவு எங்கிருந்து வருகிறது, அதில் நிரம்பியுள்ள சத்துகள்,
அவை எப்படி நம் உடலை உருவாக்குகிறது என்பதை விளக்குவது இவரின் முக்கிய அம்சம். சமையல்
பற்றி நாம் மறந்துவிட்ட முக்கியமான மந்திரத்தை அடையாளம் காட்டுகிறார். அது என்ன தெரியுமா?
சமையல் என்பது பிறர் மீது நாம் காட்டும் அக்கறை என்பதுதான்.
அலைஸ் வாட்டர்ஸ்
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக