அரிய வகை ரத்தவகையை சேர்ந்த இளைஞனை வேட்டையாடத்துடிக்கும் மாஃபியா கும்பல் - ஒக்கடுன்னாடு
ஒக்கடுன்னாடு
-2007
இயக்கம்
சந்திரசேகர் யெலட்டி
ஒளிப்பதிவு
ஜெயகிருஷ்ண கும்மாடி
இசை
எம்.எம்.கீரவாணி
ஹைதராபாத்திலுள்ள
வங்கி ஒன்று வாராக்கடன்களால் திவாலாகும் நிலைமை. வங்கியின் சொத்து ஒன்றை தனியார் ரியல்எஸ்டேட்
நிறுவனம் விற்றுக்கொடுத்தால்தான் அதன் இயக்குநர் காவல்துறையில் கைதாகாமல் தப்பிக்க
முடியும். அதன் உரிமையாளர் இந்த பணிக்காக அவரது மகனை மும்பைக்கு அனுப்புகிறார். அங்கு
வங்கிக்கு சொந்தமாக விருந்தினர் இல்லத்தை விற்க முயலும்போது நிறைய சிக்கல்கள் தோன்றுகின்றன.
உரிமையாளரின் மகன் தர்ம காரியமாக ஒருவருக்கு ரத்த தானம் செய்கிறான். அவனின் ரத்தவகை
பாம்பே பிரிவைச் சேர்ந்த அரிய ரகம். இதைத் தெரிந்துகொண்டு அவனைக் கொன்று அவன் இதயத்தை
சோனா பாய் என்ற மாஃபியா தலைவனுக்கு பொருத்த ஒரு கூட்டமே அலைகிறது. எப்படி இவர்களிடமிருந்து
இளைஞன் தப்பினான், சொத்துகளை விற்று தன் அப்பாவைக் காப்பாற்றினானா, சொத்தை விற்பதில்
உள்ள தடைகள் என்ன என்பதை சொல்லும் படம்தான் ஒக்கடுன்னாடு.
ஆஹா
படத்தின்
கான்செப்டே பாம்பே பிளட் குரூப் பற்றியது. டைட்டில் கார்டு ஓடும்போது ராவ் ரமேஷ் குரலில்
அரிய ரத்தத்திற்காக என்னென்ன பாடுபடுகிறேன் என்பதை சொல்லுகிறார். கோபிசந்த் ராவ் ரமேஷூக்கு
ரத்தம் கொடுத்தவுடன் படம் சூடு பிடிக்கிறது. சிறப்பாக நடித்துள்ளார். கதையாகட்டும்,
சண்டையாகட்டும் சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி மும்பையைச் சேர்ந்தவர் என்பதை சரியாக
பொருத்திய தெலுங்குப்படம் இதுவாகவே இருக்கும்.
படத்தின்
வசனங்கள் கொரட்டலா சிவா, நேர்த்தியான எழுதப்பட்டுள்ளன. படத்தின் இயல்பைக் கெடுக்காதபடி
வசனங்கள் உள்ளன. தெலுங்கில் இப்படியொரு படமாக என யோசிக்க வைக்கிறார் இயக்குநர் சந்திரசேகர்
யெலட்டி.
இதில் ஐயையோ என்று சொல்ல ஏதுமில்லை.
சந்திரசேகர்
யெலட்டியின் பிற படங்கள் பிரயாணம், சாகசம், அனுகோகொண்டா ஒக்க ரோஜூ, அய்தே
தான்
இயக்கிய முதல் படமான அய்தேவிற்கு மாநில அரசின் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதைப்
பெற்ற இயக்குநர் இவர்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக