நியூஸ் ஜங்க்ஷன் - ஆக்கப்பூர்வமான செய்திகள் ஐந்து






கிராமப்புற வாக்குகளைப் பெற ரூ.4 ...
பத்திரிக்கை 




அடப்பாவமே

கடன் கடன்தான்!

கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி, அமடே லஷ்மிநாராயணா. இவர் தனது கிராமத்திலிருந்து வங்கிக்கு 15கி.மீ. நடந்து சென்று வங்கிக்கடன் கட்டியிருக்கிறார். தொகை 3 ரூபாய் 45 பைசாக்கள். வங்கியில் கணக்குத் தணிக்கை நடப்பதால், இத்தொகையை அவர் கட்டியே ஆகவேண்டும் என வங்கி மேலாளர் கறார் காட்டியிருக்கிறார். இந்த சிறு தொகைக்காக இப்படி அலைய வைத்தார்கள் என நொந்துபோயுள்ளார் நாராயணா.

இந்தியா டைம்ஸ்



Participation of private sector in space sector major reform: ISRO ...



ஆஹா

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ பரிசீலித்து வருகிறது. வானியல் ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களும் இனி அனுமதிக்கப்பட உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2, 300 ஏக்கர் நிலப்பரப்பை தேடிவருவதாக இஸ்ரோ தலைவரும், விண்வெளித்துறை செயலருமான கே.சிவன் தெரிவித்துள்ளார். உலகளவில் இத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு மூன்று சதவீதம் ஆகும்.

 

 ஐயையோ

உணவில் ஒட்டுண்ணி!

அமெரிக்காவில் உள்ள வால்மார்ட், ஆல்டி ஆகிய சிறப்பங்காடிகளில் விற்ற சாலட் பாக்கெட்டுகளை வாங்கிய 200 பேர் உடல்நலம் குன்றியுள்ளனர். இந்த சாலட்டில் சைக்ளோஸ்போரா என்ற குடலை பாதிக்கும் ஒட்டுண்ணி இருந்ததாக கூறப்படுகிறது. கான்சாஸ், மின்னசோட்டா, ஐயோவா ஆகிய நகரங்களைக் சேர்ந்தவர்கள் இந்த சாலட் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து வருகின்றனர்.

யுபிஐ

நியூ

புதிய பிரதமர்!

அயர்லாந்து பிரதமராக முன்னாள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மைக்கேல் மார்ட்டின் தேர்வாகியுள்ளார். வலதுசாரி கட்சியான ஃபியன்னா ஃபெய்ல் கட்சியைச் சேர்ந்தவரான இவர் 31 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவம் கொண்டவர். மூன்று கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் மார்ட்டின், மறுகட்டமைப்பு, புதுப்பிப்பு ஆகியவை தனது முன்னுரிமைப்பணிகள் என்று கூறியுள்ளார்.

 

Crater of Diamonds visitor finds 2.23-carat brown diamond in the dirt

An Arkansas woman visiting the state's Crater of Diamonds State Park found a 2.23-carat brown diamond -- the largest discovery at the park this year.Arkansas State Parks said Mena resident Beatrice Watkins, 56, was sifting the soil at the Murfreesboro park with her daughter and granddaughters this month when she came across the gem. Watkins said she hasn't yet decided what to do with her gem, but she is considering keeping it as inheritance for her children and grandchildren.

upi


கருத்துகள்