நோய்த்தொற்றை தடுக்கும் என்றால் எந்த மருந்தையும் பயன்படுத்தலாம்! - சஞ்சய் ஓக்



Doctor, Covid, Woman, Coronaviruses, Covid-19, Mask



மருத்துவர் சஞ்சய் ஓக், கொரோனா சிறப்பு மருத்துவப் பிரிவு, மகாராஷ்டிரம்

மும்பையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே?

நாங்கள் இந்த பெருந்தொற்று நிலைமைக்கு தயாராக இருக்கவில்லை என்பதே இதற்கு காரணம். இப்போது அரசு தனியார் மருத்துவமனைகளின் நூறு சதவீத ஐசியு பிரிவு படுக்கைகளையும், 80 சதவீத பொதுப்பிரிவு படுக்கைகளையும் கையகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த தட்டுப்பாடு குறையும் என்று நினைக்கிறேன்.

சிகிச்சை மருந்துகளான ரெம்டெவிஸிர், ஃபெவிபிரவிர் மருந்துகள் கிடைப்பதற்கு என்ன முயற்சிகள் செய்திருக்கிறீர்கள்.

இதுபற்றிய சோதனைகளை செய்வதற்காக ஐசிஎம்ஆருக்கு கடிதங்கள் எழுதியுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் சோதனைகளைத் தொடங்குவோம்.

சோதனைகளை அதிகளவில் செய்யவில்லையே?

காரணம், இதற்கான பரிசோதனைக் கருவிகளை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் உடனடியாக அனைவருக்கும் சோதனைகளை செய்ய முடியவில்லை. முதலில் இரு ஆய்வகங்கள்தான் இருந்தன. தற்போது 77ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்து இந்த எண்ணிக்கையை நூறாக்க முயன்றுவருகிறோம். தற்போது சோதனைக்கருவியை கோவிட்-19 நோய்த்தொற்றுக்கும், காசநோய், வேறுபல நோய்த்தொற்றுகளுக்கும் பயன்படுத்த முதல் அமைச்சரைக் கேட்க நினைத்துள்ளோம்.

கொரோனா தடுப்பு பணியில் தனியார் மருத்துவமனைகளின் பங்கு குறைவாக இருக்கிறதே?

பங்களிப்பை பற்றி அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். நாம் இதற்கான பரிந்துரைகளை வழங்கலாம். இதற்காக அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பலரும் நோய்த்தடுப்பில் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

HCQ மருந்தை நீங்கள் பரிந்துரைத்தாலும் உங்கள் குழுவிலேயே பலருக்கும் மாற்று கருத்து உள்ளதே?

மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து தேவையான மருந்துகளை பயன்படுத்தலாம். மருத்துவர் ஜாரிக் உட்வைடியா நான் பரிந்துரைத்த மருந்து உறுதியாக செயல்படுவதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்று கூறினார். ஆனால் நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் வேளையில் நாம் சிறிது பயன்கொடுத்தாலும் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதில் எந்த தவறுமில்லை.

தி வீக்

பூஜா பிரையா ஜெய்ஸ்வால்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்