ராகுல்காந்தி ஜனநாயகத்தை காக்கும் அடுத்த தலைவரா? - ஓர் அலசல்






Rahul Gandhi Wink GIF










உண்மையில் ராகுல்காந்தி யார்?

துஷ்யந்த்

இந்துஸ்தான் டைம்ஸ்

உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பல்வேறு போலிச்செய்திகள், வதந்திகள், கிண்டல், கேலிகள் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி உருவாக்கப்பட்டு வருகின்றன. பாஜக கட்சி, அதன் எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியைத்தான் தீவிரமாக தாக்கி வருகிறது. கதைகளை புனைந்து வருகிறது.

ராகுல்காந்தி பேசும் வார்த்தைகள், எழுதும் எழுத்துகள், பதிவிடும் வீடியோக்கள் அனைத்தையும் பாஜக, திருகலாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது. ஆனால் அனைத்து மக்களும் அதனை பார்த்து அவர் மீது தாழ்ந்த கருத்துகளை உருவாக்கிக்கொள்வதில்லை. பொதுவாக பலரும் சொல்லும் கருத்து, பாருங்கள் அவர் விடுமுறைக்காக வெளிநாடு சென்றுவிட்டார் என்று. நானும் கூட அப்படி நினைத்துள்ளேன்தான். ஆனாலும் ராகுல்காந்தி இப்படித்தான் என்று முழுமையாக கூறிவிட முடியாதபடிதான் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

அவரைச் சந்தித்தவர்கள் யாரும் எதிர்மறையான கருத்துகளை சொன்னதில்லை. எளிமையானவர், புத்திசாலி என்று கூறக்கேட்டிருக்கிறேன். பல்வேறு கலாசாரம், உறவுகளுக்கு மதிப்பளிப்பவர் என்று அவரது பேச்சுகளை கேட்கும்போது தோன்றுகிறது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அன்பு மற்றும் வெறுப்பு பற்றி பேசினார். அதற்கு பிறகு ஒருமாதம் கழித்து ஜார்க்கண்டில் தப்ரேஷ் அன்சாரி கொல்லப்பட்டபோது அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து குரல் கொடுத்தார். குடியுரிமைசட்டத்திருத்த த்திற்கு எதிராக மாணவர்கள் போராடி அடிவாங்கி சுருண்டபோது ராகுல்காந்தி இதுபற்றி ஏதும் கூறவில்லை. அவரது குழுவினரில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா, ராமர் கோவிலுக்கு ஆதரவாக பேசியபோதும் கூட அவர் எந்த மறுப்பும் கூறவில்லை. அடுத்து, மணிஷ் திவாரி, கொரோனா தொற்றுக்கு முஸ்லீம்கள் காரணம் என்று பேசியபோது கூட ராகுலின் மௌனம் கலையவில்லை. ஜனநாயகத்திற்கு ஆதரவாளர் என்று ராகுல்காந்தி புகழ்ந்து கூறப்படுகிறார். அப்புறம் ஏன் கட்சியைப் பற்றி நாளிதழில் எழுதியதற்காக சஞ்சய் ஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

அவர் கட்சியின் தலைவர் இல்லை என்று சிலர் இதற்கு கருத்துகளை கூறுவார்கள். அவரால் அவர் விரும்பும்போது கட்சியின் தலைவர் ஆக முடியுமே? உத்தரப்பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சி தலைவரான அஜய்குமார் லல்லு, போராட்டம், மக்களைத் தொடர்பு கொள்வது, அவர்களிடம் கலந்துரையாடுவது ஆகியவற்றை கட்சி வெல்வதற்கான மந்திரமாக சொன்னார். உண்மையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் அவர்களில் ஒருவரை நிறுத்தி ராகுல்காந்தி பற்றி கேட்டுப்பாருங்கள். அவர் அரசியலில் பெரிய ஆர்வங்களின்றி இருப்பதை தயங்கி தடுமாறியபடி சொல்லுவார்கள்.

அவர்களுடைய உள்வட்டாரத்தில் கேட்டால் அவர் இந்தியாவில் தேர்தலில் வெல்ல விரும்பவில்லை. அவர் இந்த சமூகத்தின் அமைப்பை மாற்ற விரும்புகிறார் என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அப்படியென்றால் அவர் ஏன் தேர்தல் பிரசாரங்களை செய்யவேண்டும்? கட்சி சார்பாக எதற்கு அவரின் புகைப்படத்தை காட்டுகிறார்கள்?

உண்மையிலேயே அவர் காந்தி, மண்டேலா, கன்ஷிராம் போல சமூக புரட்சிவாதி என்றால் நல்லதுதான். ஆனால் நின்று கிடக்கும் வண்டியின் சக்கரத்தை மட்டும் பழுதுபார்த்தால் வண்டி நகராது. எஞ்சின் மற்றும் பிரேக்குகளையும் பழுதுபார்க்கவேண்டியிருக்கிறது. உண்மையிலேயே இதற்கு அவர் உழைக்க தயாராக இருந்தால் மாற்றங்கள் நடக்கலாம்.

 


கருத்துகள்