என் மீதான விமர்சனங்களுக்கு ராக்கெட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளேன்! - லியாண்டர் பயஸ்







Outlook India Photo Gallery - Sports
அவுட்லுக்






லியாண்டர் பயஸ்

விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்றபிறகு நிர்வாகம் சார்ந்த பணிகளுக்கு செல்லவிருக்கிறீர்களா?

எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை மேற்கொள்வேன். இதுதான் என்றில்லை. நான் திறந்த மனதோடு இருக்கிறேன்.

உங்கள் சுயசரிதை எப்போது வெளிவரவிருக்கிறது?

நாங்கள் முன்பிருந்தே அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். எப்படி வந்திருக்கிறது என இனிமேல்தான் பார்க்கவேண்டும்.

ஆஸ்கர் விருதை வாங்கவேண்டும் என்று நீங்கள் முன்னர் கூறியது உறுதியாகத்தானா?

ஆமாம். நான் முன்னர் அப்படி கூறினேன். சாதனை கொஞ்சம், கனவு கொஞ்சம் என கருதி அப்படி சொன்னேன். விளையாட்டில் சாதிப்பதற்கான கனவில் அப்படி சொன்னேன்.

 ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான பரிசுகளை நிதியும் வழங்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளதே?

நான் இந்த கோரிக்கையை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரிதான் விளையாட்டில் உழைக்கிறோம். விளையாட்டு இப்போது முழுக்க கார்ப்பரேட் தன்மை கொண்டதாக மாறும்போது, ஒரு மாதிரியான ஊதியம் என்பதை பரிசீலிக்கலாம்.

பொதுமுடக்க காலத்தில் ஊக்கமூட்டும் பேச்சாளராள மாறியிருக்கிறீர்கள். எப்படி?

வாழ்க்கை முழுவதும் நான் இப்படித்தான் இருந்திருக்கிறேன். நான் சிறுவயதில் என் சகோதரிகளோடும், நண்பர்களோடும் வாழும்போது தலைவனாகவே இருந்திருக்கிறேன். சில சூழ்நிலையில் பல்வேறு வேலைகளை செய்பவனாகவும், ஒருங்கிணைப்பாளனாகவும் இருந்துள்ளேன். 30 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களின் சிறந்த ஆளுமைத் தன்மையைக் கண்டுள்ளேன். நன்மதிப்பை  அறிந்துள்ளேன். நான் சொல்வதை நீ கேள் என்று கூறாமல் பலருக்கும் உலகிலுள்ள எடுத்துக்காட்டுகளை சொல்லி ஊக்கமூட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன். என்னுடைய பன்னிரெண்டு வயதில் என்னுடன் அம்மாவும், அப்பாவும் இல்லை. என்னை நானே நிர்வாகம் செய்ய கற்றுக்கொண்டேன். என்னுடைய போட்டிகள், பணம், பாஸ்போர்ட், வாழ்க்கை என அனைத்தையும் நானேதான் பார்த்துக்கொண்டேன். இதனால் இன்றைய கார்ப்பரேட் உலகில் ஒருவருடைய தினசரி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று என்னால் கூற முடிகிறது.

நீங்கள் மனதில் பட்டதை பேசியதற்காக கடினமான சூழ்நிலையை சந்தித்துள்ளதாக நினைக்கிறீர்களா?

அதேசமயம் நான் என் ராக்கெட்டின் மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளேன். அதையே முக்கியமாக கருதுகிறேன்.

நீங்கள் வயதானவராக  விளையாடிக்கொண்டிருக்கும் போது, முக்கியமான விளையாட்டு வீரர்களை எப்படி உங்களோடு விளையாட ஒப்புக்கொள்ள வைத்தீர்கள்?

காரணம் நான் அடுத்தடுத்து வெற்றிபெற்றுக்கொண்டிருந்ததுதான் காரணம். ஒருவர் ஒன்று அல்லது இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது பெரிதல்ல. பதினெட்டு கிராண்ட்லாம் பட்டங்களை ஒருவர் வெல்வதற்கு கடினமான உழைப்பு, ஒழுக்கம், முயற்சி தேவை. இப்படி இருப்பவர்களுடைய வாழ்க்கை சலிப்பாகத்தான இருக்கும். என்னுடைய உழைப்பைப் பார்த்துதான் முக்கியமான விளையாட்டு வீரர்கள், என்னுடன் சேர்ந்து விளையாட ஒப்புக்கொண்டனர்.

 பதினெட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறீர்கள். மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி நிறைய விமர்சனங்களை சந்தித்திருக்கிறீர்கள். ஏன் உங்களை விளையாடத் தேர்ந்தெடுப்பதிலும் கூட பல்வேறு தடைகள் இருந்தன. அவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் என்னை ஆசீர்வதிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். இந்த நீண்டகால விளையாட்டு வாழ்க்கையில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். மொத்தமாக 70 சதவீத வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளேன். பொதுவாக விளையாட்டு வீரர்கள் 50 சதவீத த்திற்கு மேலான வெற்றி சதவீதத்தைக் கொண்டிருப்பதே கடினம். எனக்கு விளையாட்டிலும், சொந்த வாழ்க்கையிலும் நிறைய ஏற்ற இறக்கங்கள் உண்டு. நாம் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை என்னைவிட நாட்டையே முதன்மையாக கருதினேன்.

இந்துஸ்தான் டைம்ஸ்


கருத்துகள்