இசெக்ஸ் முறைக்கும் மாறும் பாலியல் தொழிலாளர்கள்! - நோ டச் செக்ஸ்- டிஜிட்டலாகும் செக்ஸ் தொழில்
பிக்ஸாபே |
இ- செக்ஸ்: செக்ஸ் துறையில் உருவாகும் புதிய ஐடியாக்கள்
இந்தியாவில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள் பெருந்தொற்று சூழலால்
கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியால் தங்களை
புதுப்பித்து தொழிலுக்கு திரும்பியுள்ளனர். கோவிட் -19 தொற்று காரணமாக, செக்ஸ் சாட்,
வீடியோ செக்ஸ் என புதிய கலைவடிவத்திற்கு பழகிவருகின்றனர்.
சிவப்பு விளக்கு பகுதிகள் மட்டுமல்ல பெங்களூரு போன்ற நகரங்களிலுள்ள
பாலியல் தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாலியல் தொழிலை நடத்துவதற்கான வழிமுறைகளை
சமூக அமைப்புகள் கற்றுத்தந்து வருகின்றன. இதில் பணத்தை இவாலட் மூலம் பெறமுடியும்.
தமிழகத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் அமைப்புரீதியாக இல்லை.
பெருந்தொற்று காலத்தில் அவர்கள் குழந்தை, குடும்பங்கள் என வசித்து வருகின்றனர். இவர்களுக்கு
வருமான வாய்ப்பாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழியாக வாடிக்கையாளர்களை அணுகுவதுதான் புதிய
முறையாக உள்ளது. வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு செய்து பெண்களை பார்த்துவிட்டு, தங்களுக்கு
பிடித்திருந்தால் அதில் அவர்களுடன் தொடர்புகொள்கின்றனர் 30 நிமிடங்களுக்கு 500 ரூபாய்
என கட்டணம் விதித்து கோல்கட்டாவைச் சேர்ந்த சோனாகான்ச்சி பகுதி பாலியல் தொழிலாளர்கள்
பெற்று வருகின்றனர்.
வாட்ஸ்அப், ஜூம், டெலிகிராம், ஸ்கைப் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி
தொழிலாளர்கள் தங்கள் தொழிலை டிஜிட்டல்மயப்படுத்தி உள்ளனர். ஆனால் இதிலும் போட்டியில்லாமல்
இல்லை. இணையத்தில் ஏராளமான பாலியல் வலைத்தளங்கள் இலவசமாகவே கிடைக்கிறது. மேலும், இணையவழியில்
முன்னமே நிறைய நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளதால், அவர்களையும் பாலியல் தொழிலாளர்கள்
எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோல்கட்டாவில் நேரடியான பாலியல் தொழில் இயல்புக்கு திரும்ப
அதிக காலமாகலாம். பெருந்தொற்று பாதிப்பால் நடனம், பேச்சு என தொடர முடிவு செய்துள்ளனர்.
“நாங்கள் தொழிலாளர்களுக்கு பாலியல் தொழிலில் கவனமாக பயன்படுத்தவேண்டிய விஷயங்கள், முன்னெச்சரிக்கைகளைப்
பற்றி கற்றுத்தந்து வருகிறோம்” என்கிறார் சாகேலி சங் அமைப்பைச் சேர்ந்த தேஜஸ்வி சாகேகர்.
மாஸ்க், சானிடைசர், உதட்டில் முத்தம் கொடுக்க கூடாது என பல கண்டிஷன்கள் இருப்பதால்,
நேரடியான பாலியல் தொழில் எப்படி நடைபெறும் என்று தெரியவிலை. நாங்கள் எங்கள் கண்டிஷன்களுக்கு
ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர்களை இனிமேல் இங்கு அனுமதிப்போம் என்கிறார்கள் புனே வட்டார
பாலியல் தொழிலாளர்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக