ஆபத்தான வசீகரமான கலைஞன்! ரிச்சர்ட் மேடன்
magzter |
ஆபத்தான கலைஞன்
ரிச்சர்ட் மேடன்
நாடக நடிகரான ரிச்சர்ட் தனது கலை சார்ந்த பணிகளில் தீவிரமாக
இருப்பவர். தனது நடிப்பதை அவரே கடுமையாக விமர்சித்து சீர்திருத்திக்கொள்ளும் தன்மையை
பிரமிப்போடு பார்க்கிறேன். சிண்ட்ரெல்லாவில், அவர் ஸ்காட்லாந்துகாரராக இருந்தாலும்
ஆங்கில உச்சரிப்பில் பேசி இளவரசனாக நடித்திருந்தார். படப்பிடிப்பு முழுவதும் அனைவரிடமும்
அவர் அந்த பாணியில் பேசிக்கொண்டிருந்தார். அந்த மெனக்கெடல் அசாத்தியமான ஒன்று. குறிப்பிட்ட
கதாபாத்திரங்களுக்கான குணங்களை அவர் இயல்பாக வரித்துக்கொள்வது என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
நான் இயக்கிய ரோமியோ ஜூலியட் படத்தில் அவர் ரோமியோவாக விதிகளை கடைபிடிக்காத இளைஞனாக,
பிறரை காதலிக்க வைக்கும் தன்மை கொண்ட கண்களுடன் வசீகரமாக நடித்திருந்தார். சினிமா துறையில்
ரிச்சர்ட் அபாயகரமான கலைஞனாக உருவெடுத்து வருகிறார்
என்பதை நான் உறுதியோடு சொல்கிறேன்.
கென்னத் பிரானாக்
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக