மக்களுக்கு உதவி செய்ய தேவையான தகவல்கள் இல்லை! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தி பிரின்ட் |
நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர், இந்தியா
ஆங்கிலத்தில்:ஆர்.சுகுமார், சிஷிர் குப்தா
நன்றி:இந்துஸ்தான் டைம்ஸ்
இருபது லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்திருக்கிறீர்கள்.
அப்போது பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகள் என்னவாகும்?
மத்திய அரசு முன்னர் அறிவித்த
அறிவிக்கைப் படி4.2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடனாகப் பெறமுடியும். இதன் காரணமாக
மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டியுள்ளது. இப்போது உடனே வரி வருவாய் வரவில்லை,
முதலீடு குறைந்துவிட்டது என்று கூறவேண்டியதில்லை. இன்னும் பத்து மாதங்கள் காத்திருந்தால்
இதற்கான பலன்களை நாம் பெற முடியும்.
வரிவருவாய்க்கான மாதிரியை உருவாக்கியிருக்கிறீர்களா?
கோவிட் -19 போன்ற நோய்த்தொற்று
காலத்தில் என்ன மாதிரியான வருவாய் மாதிரிகளை நாம் உருவாக்க முடியும்?
வரிவருவாய் குறைந்தால்
அதனை எப்படி மாநிலங்களுடன் பங்கிட்டுக்கொள்வீர்கள்?
கிடைக்கும் வரி வருவாயை
மத்திய அரசும் மாநில அரசுகளும் பங்கிட்டுக்கொள்வதுதான் நடைமுறை, மத்திய அரசு வரிவருவாய்
போக ஜிஎஸ்டி இழப்பீட்டையும் மாநிலங்களுக்கு அளிக்கவேண்டியுள்ளது. எனவே வரிவருவாய் குறைந்தால்
அதனைப் பங்கிட்டுக்கொள்வது பற்றிய ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் நடைபெறும்.
இந்த எந்த விதமான நிதி பற்றாக்குறையை இப்போது எட்டியுள்ளது?
நான் இப்போதே அதைப்பற்றிய
கணிப்புகளை கூற விரும்பவில்லை. திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை கணக்கீடுகள் தயாரிக்கப்பட்டு
வருகின்றன.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள நிதி, இந்திய உற்பத்தியில்
15 சதவீதம் கூட இல்லை என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளதே?
பிற நாடுகளுடன் ஒப்பிட்டு
இந்திய அரசு வழங்கியுள்ள நிதித்தொகையை பேசுவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அப்புறம்
இந்த நிதி வேறு எங்குதான் சென்றிருக்கும் என விமர்சகர்கள்தான் சொல்லவேண்டும். பணத்தை
நாம் தொழில்துறைக்கு பதினைந்து சதவீதம் எனும் அளவுக்கு கூட வழங்கவில்லையென்றால் தொழில்துறையினர்
ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாது. அவர்கள் இதிலிருந்து தப்பிப்பதை விட பிழைத்திருப்பது
முக்கியம் என்று நினைக்கிறேன். நிதியை அவர்களுக்கு அளித்திருப்பது பலன் தர சிறிது காலம்
பிடிக்கும்.
தொழில்துறையினரின் துயரம் நீக்க நிதியுதவியை கடனாக அளித்திருக்கிறீர்கள்.
சரி. ஆனால் வேலையின்றி மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருக்கும் நடுத்தர வர்க்கம்,
அவர்களுக்கும் கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த கஷ்டமும் படவில்லையா? இங்கிலாந்தில் அத்தகையோர்க்கு
மாதம் 2500 பௌண்டுகள் என அரசு உதவிகளை வழங்கியிருக்கிறதே?
நான் அவர்களுக்கு உதவிகள்
தேவையில்லை என்று எப்போது சொன்னேன். உடனே நீங்கள் அந்த முடிவுக்கு வராதீர்கள். உதவிகள்
பெருந்தொற்று காலத்தில் அனைவருக்குமே தேவைதான். அது சதவீத அளவில் மாறுபடுகிறது. உங்களது
ஒப்பீடு வளர்ந்த மேம்பட்ட பொருளாதாரத்தை கொண்ட நாட்டை உதாரணமாக கொண்டது. நம்மிடம் உதவிகளை
வழங்க தகவல்கள் தேவை. 2014ஆம்ஆண்டு பிரதமர் மோடி வந்தபின்தான் வங்கிக்க்கணக்கு மூலம்
நிதி அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டது. இப்போது அதன் வழியாக உரமானியம், எரிவாயு உருளைகளுக்கான
மானியம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
உதவி செய்ய தகவல்கள் தேவை. எங்களை விமர்சனம் செய்யும் வல்லுநர்கள் இதுபற்றி கவனம் செலுத்தினால்
நல்லது. மாநிலங்கள் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருந்தால்
கூட உதவலாம். அப்படியும் விவரங்கள் நம்மிடம் இல்லை. வரிகள் மூலம் பெற்ற மக்கள் பணத்தை
சரியானபடி செலவு செய்யவேண்டும் என்றுதான் முயல்கிறேன். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
தரக்கூடாது என்பதில்லை. அவர்களுக்கு குறைந்தபட்சம் குடும்ப அட்டையாவது இருந்தால் உதவி
செய்வதில் பிரச்னை இல்லை. அதுவும் இல்லையென்றால் என்ன செய்வது? முடிந்தவரை பொது விநியோக
முறை மூலமும், ஜன்தன் வங்கிக்கணக்குகள் மூலமும் அரசு உதவிகளை வழங்கிவருகிறது.
நீங்கள் வழங்கிய நிதி ஊக்கத்தொகையை உங்கள் பார்வையில் எப்படி
பார்க்கிறீர்கள்.
பிரதமர் மோடி, நிலம், தொழிலாளர்கள்,
நிதி புழக்கம், சட்டம் ஆகியவற்றை மையமாக கொண்டு நிதி ஊக்கத்தொகை இருக்கவேண்டுமென விரும்பினார்.
நாங்கள் அந்த வகையில் இத்திட்டத்தை வடிவமைத்து உள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
இதனால் பயன் உண்டு. மக்கள் எங்களை எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் நாங்கள் எதிர்பார்த்தபடி
எங்களது திட்டம் அனைவருக்கும் பயன்களை அளிக்கும் என்று நினைக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக