ஆப்ரோ அமெரிக்கர்களில் ஒருத்தி! - ரெஜினா கிங் - டைம் 2019
என்னை உணரவைத்த பெண்!
ரெஜினா கிங்
நான் சிறுமியாக இருந்து வளரும்போது ஆப்ரோ
அமெரிக்கர்கள் நடித்த பல்வேறு தொடர்களைப் பார்த்துள்ளேன். ஆமென், 227, குட் டைம்ஸ்
ஆகியவை முக்கியமானவை. அதில் 227 தொடரில் நடித்த ரெஜினா கிங், பிரெண்டா ஜென்கின்ஸ் என்ற
பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அமெரிக்காவில் உள்ள ஆப்ரோ அமெரிக்க
இளம்பெண்ணின் தன்மைகளை அப்படியே உள்வாங்கி உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் பிரமாதமாக
நடித்திருந்தார். அதில் என்னை நானே பார்ப்பது போல இருந்தது.
அவரை குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சந்தித்தபோது
எனது குடும்பத்தில் உள்ள உறுப்பினரை சந்தித்து பேசியது போலவே இருந்தது. என்னை அப்படி
உணரவைத்தார். அவர் தனது நடிப்பைக் கடந்து பிறரின் நடிப்பையும் பாராட்டி ஊக்குவிப்பவராக
இருந்தார். மேலும் அவர் நடிகை என்பதைத் தாண்டி படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தார்.
அவர் இயக்குநரும் கூட. வணிக உலகில் ஆப்ரோ அமெரிக்கர்களை, பெண்களை எப்படி பார்க்கிறார்கள்
என்பதையும் மாற்றுவதற்கான முயற்சியில் அவர் இறங்கியிருந்தார். கூட்டுப்புழுவாக இருந்து
உலகை பார்ப்பதிலிருந்து அவர் மாறி, வளர்ந்த பட்டாம்பூச்சியாக மாறிவிட்டார்.
வயலோ டேவிஸ்
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக