நினைவுக்குறிப்புகள் எழுதி பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்! - டைம் செல்வாக்கு பெற்ற இளம் தலைவர்கள்
time |
தாரா
வெஸ்டோவர்
அமெரிக்காவின்
இடாகோவிலுள்ள கிளிப்டனில் பிறந்த எழுத்தாளர், கட்டுரையாளர். 33 வயதாகும் இவர் எழுதிய
எஜூகேடட் என்ற நூல் வாசகர்களிடையே மிக பிரபலமானது. ஏராளமான விருதுகளையும் பெற்றுத்
தந்தது. இல்லம் ஒன்றில் தங்கிப் படித்து பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம்
பெற்றது வரையிலான போராட்டத்தை தாரா இந்த நூலில் உருக்கமாக எழுதியுள்ளார்.
நாவலில்
அவரது சொந்த வாழ்க்கையோடு அமெரிக்க சமூகத்தில் உள்ள கருப்பு, வெள்ளை, சிவப்பு மாநிலங்கள்,
நீல மாநிலங்கள், கிராமம், நகரம் என பல்வேறு வேறுபாடுகளை அடையாளப்படுத்தியிருப்பார்.
இந்நூலின் வெற்றி அவரது குரலை பலரும் கேட்பதற்கான வாசலைத் திறந்துள்ளது. இனிமேல் அவர்
தன் மனதிலுள்ள வேறுவேறு விஷயங்களைப் பற்றி பேசுவார் என்று நினைக்கிறேன்.
டைம்
பில்கேட்ஸ்
2
அய்லீன்
லீ
பாகுபாட்டிற்கு
எதிரான போராளி
முதலீட்டுத்
துறை தீவிரமான போட்டிகளைக்கொண்டது. அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்,
வசைபாடுதல், குற்றங்கள் என பெருகிவந்தன. அதற்கு தீர்வு காண அய்லீன் லீ வந்தார். இவர்,
இதற்காகவே கௌபாய் வென்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பெண்களுக்கு உதவ முன்வந்தார்.
ஆல் ரைஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண் தொழிலதிபர்களை ஒருங்கிணைத்தார்.
இதனால், 200க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் இவரது வழிகாட்டுதலில் வணிகத்தில் இணைந்தனர்.
இதன் காரணமாக இவர்களின் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளன. அனைத்தும் அய்லீன் லீ துணிச்சலால்
சாத்தியமாகியுள்ளது.
டைம்
கிறிஸ்டன்
க்ரீன்
கருத்துகள்
கருத்துரையிடுக