இன பாகுபாட்டை எதிர்க்க குழந்தைகளுக்கு கற்றுத்தரும் நூல்கள் - வாசிப்பு பக்கம்
ஜிபி |
உலக
நாடுகள் அனைத்திலும் பேரினம், சிறுபான்மை இனத்திற்கு எதிராக பல்வேறு வன்முறைகள், அநீதிகள்
நடந்து வருகின்றன. பெரும்பாலும் நிறைய சம்பவங்கள் அரசியல் அனுகூலத்திற்காக வலிந்து
ஏற்படுத்தப்படுபவைதான். இதன்மூலம் சிறுபான்மையினரை பயத்தில் அச்சுறுத்த வைத்து பெரும்பான்மையினருக்கு
ஆட்சி செய்வதற்கான திறனை வழங்குவது போல மாயக்காட்சியை உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மையில்
ஏமாற்றப்படுவது மக்கள்தான். அறிமுகமற்ற ஒருவரை உங்கள் எதிரியாக நினைத்து அவர்கள் சொத்தை
அழித்து, பெண்களை கற்பழித்து, அடித்துக்கொல்வது என்பது அநீதிதானே? இதனை தவறு என வலியுறுத்தும்
நூல்களை குழந்தைகளுக்கு வாசிக்க கொடுக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் அவர்கள் நேர்மையாகவும்
கண்ணியமாகவும் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஆல் அமெரிக்கன் பாய்ஸ்
ஜேசன் ரினால்ட்ஸ்
பிரெண்டன் கைலி
கருப்பு
மற்றும் வெள்ளை இன சிறுவர்களுக்கு காவல்துறையால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை பற்றிய
கதை.
ஸ்டாம்ப்டு: ரேசிசம், ஆன்டி ரேசிசம் அண்ட்
யூ
ஜேசன் ரினால்ட்ஸ்
இப்ராகிஸ் எக்ஸ் கெண்டல்
இனபாகுபாடு
கொண்ட உலகில் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகள் பற்றி
விவரிக்கப்படுகிறது.
ரெசிஸ்ட்: 35 ஆர்டினரி பீப்பிள் ஹூ ரோஸ்
அப் எகெய்ன்ஸ்ட் டைரனி அண்ட் இன்ஜஸ்டிஸ்
வெரோனிகா சேம்பர்ஸ்
படங்கள் – பால் ரைடிங்
இன
பாகுபாட்டிற்கு எதிரான 500 ஆண்டுகால வரலாற்றில் 35 முக்கியமான ஆளுமைகளை ஆவணப்படுத்தியுள்ளார்
ஆசிரியர்.
தி யங்கஸ்ட் மார்ச்சர்
சிந்தியா லெவிங்கன்
படங்கள் – வெனஸா பிராண்டலி நியூட்டன்
பிர்மிங்காம்
நகரில் 1963ஆம் ஆண்டு இனபாகுபாட்டிற்கு எதிராக குழந்தைகள் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர்.
அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. மனிதர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்
நூல் இது. இப்பேரணியில் ஒன்பது வயது சிறுமி ஆட்ரேயின் கதையை அழகுற சொல்கிறார்கள். வாசித்துப்
பார்த்து குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக