ஆரம்பநிலை சுகாதாரத்திலேயே நாம் நின்றுகொண்டிருக்க முடியாது! - இந்து பூஷன் - ஆயுஷ்மான் பாரத்






Family, Health, Heart, Human, Group, Personal
cc




மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை

ஆயுஷ்மான் பாரத், இயக்குநர் இந்து பூஷன் 

திட்டம் தொடங்கி இருபது மாதங்களாகிறது. இயக்குநராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

இத்திட்டத்தை தொடங்கி ஓராண்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. எங்களது ஐடி குழு, திட்டத்தை நாடு முழுக்க விரிவு செய்ய முயன்று வருகிறது. மேலும் மக்கள் அதிக விலையில் திட்டம் இருந்தால் அதனை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். குறைவான கட்டணம் இருந்தால் நிறைய விஷயங்களை புறக்கணிக்கின்றனர். எனவே நாங்கள் முக்கியமான சிகிச்சைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க கவனம் கொண்டுள்ளோம். 

பல்வேறு மருத்துவமனைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு செல்ல முயன்று வருகிறோம். மாநிலங்கள் இத்திட்டத்தை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. 

மக்களில் 30  சதவீதம் பேரை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தகவல்சேகரிப்பில் ஏன் இப்படி பிழைகள் நடக்கின்றன?

நாங்கள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேரை இத்திட்டத்திற்கு உள்ளே கொண்டு வர நினைத்துள்ளோம். இதற்கு 2011ஆம் ஆண்டு எடுத்த சமூக பொருளாதார கணக்கெடுப்பை இத்திட்டத்திற்கு அடிப்படையாக கொண்டுள்ளோம். இத்திட்டத்தில் சில பிரச்னைகள் நடந்துள்ளது உண்மைதான். நீங்கள் நியாயவிலைக்கடையில் பொருட்கள் வாங்குகிறீர்களா, இலவச எரிவாயு உருளை பெறுகிறீர்களா, இலவச வீடு பெற்றிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு பிஎம்ஜே திட்டத்தை பெறவும் உரிமை உள்ளது. நாங்கள் இம்முறையில்தான் பயனர்களை சேர்த்து வருகிறோம். 

உங்கள் திட்டத்தை விமர்சிப்பவர்கள். தொடக்க நிலை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிறார்களே?

இது தவறான கருத்து. நாங்கள் அனைத்து நோய்களையும் இணைத்து மக்களுக்கு சிகிச்சை தேவை என்றுதான் செயல்பட்டு வருகிறோம். புற்றுநோய், தொற்றுநோய்கள் என இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. எழுபது ஆண்டுகளாக நாம் தொடக்கநிலை சுகாதாரத்திற்கு நேரத்தை செலவிட்டாயிற்று. இனியும் நாம் அங்கேயே நிற்க முடியாது. அடுத்தக் கட்டத்திற்கு நாம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதயநோய், நீரிழிவுநோய், புற்றுநோய் ஆகியவை ஏழைகளுக்கு வரும்போது அவர்களால் அதற்கு செலவு செய்ய முடியாது. அவர்களுக்கு உதவுவதற்குதான் நாங்கள் முயல்கிறோம். ஏழைகளை நாம் நோய்களுக்காக பலிகொடுக்க முடியாது. 

இந்த திட்டத்தை விரிவுபடுத்த என்ன யோசனைகள் இருக்கிறது?

இத்திட்டத்திற்கான நிதியை இருமடங்காக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. 

எகனாமிக் டைம்ஸ் - மேகஸின்

ஸ்ருதிஜித் கேகே





 




கருத்துகள்