அசுரகுலம், நட்பதிகாரம் இரு மின்னூல்கள் வெளியீடு! - அமேஸான் வலைத்தளம்


இரண்டு மின்னூல்கள் அறிமுகம்! 








படிப்பது, எழுதுவது சார்ந்தே நான் இருக்கிறேன். இதன் காரணமாக பெரிய நட்பு வட்டத்தை என்னால் உருவாக்கிக்கொள்ளமுடியவில்லை. அதேசமயம் உறவு என்பது சுயநலன் சார்ந்தது என்பதை பல்வேறு உறவுகளை நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன. மனம் விட்டு ஒருவரிடம் பேசுவது என்பதே இன்று கடினமாக இருக்கிறது. இத்தகையை சூழலில் எனக்கு பள்ளிப்பருவத்தில் நண்பன் ஒருவன் கிடைத்தால் அவனது வாழ்க்கை துணிச்சலானது எனது குரலாக அவன் இருந்தான். தடுமாற்றங்கள் வாழ்வில் தென்படும்போதெல்லாம் நான் அவனையே நினைத்துக்கொள்கிறேன். அவனோடு உரையாடிய சில ஆண்டு பதிவு
கள்தான் இந்த நூல். 

அமேஸானில் கிடைக்கிற நூலை கிண்டில் கணக்கு தொடங்கி வாசியுங்கள். நன்றி. 


நட்பதிகாரம் 






















முத்தாரம் வார இதழில் சித்திரவதை கருவிகள் பற்றி எழுதும்போது சைக்கோ கொலைகாரர்களைப் பற்றி எழுதும் உந்துதல் தோன்றியது. அதன் விளைவாக அலுவலகம் முடிந்தபிறகு அரைமணிநேரம் அங்கேயே உட்கார்ந்து பல்வேறு வலைத்தளங்களை படித்து சுருக்கமான அறிமுகமாக அசுரகுலம் என்ற பெய
ரில் தொடராக பிரதிலிபி தமிழ் வலைத்தளத்தில் எழுதி வந்தேன். 

பின் அதனை நூலூக மாற்ற நினைத்தேன். அதற்கு பல நூல்களை தரவிறக்கி படித்து கொலைகாரர்களின் கொலை பாணி, அவர்களின் மனநிலை, இளமைக்காலம், பிடிபட்டது ஆகியவற்றை வாசித்து அசுரகுலம் நூலை எழுதினேன். 

அடிப்படையில் இதன் நோக்கம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்குவதே. இதில் இடம்பெற்ற அமெரிக்கர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் கூட மெல்ல மனச்சிதைவுக்கு உள்ளாகி இப்படிப்பட்ட வன்முறைகளில் இறங்கி வருகின்றனர். அவர்களுக்கான சரியான தெரபி சிகிச்சை அவர்களை சிதைவிலிருந்து மீட்கும். மீண்டும் அவர்கள் சமூகத்தில் இணைந்து வாழவேண்டும் என்பதே என்னுடைய பேராசை. இது நடப்பது இன்றைய காலகட்டத்தில் சாத்தியம் இல்லை. அதற்காக அதனை நான் கைவிட்டுவிட விரும்பவில்லை. இந்த நூலை நீங்கள் படித்தால் இந்த தன்மையை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். 

நூல்களை குறிப்பிட்ட நோக்கம் சார்ந்து எழுது உன்னால் முடியும் என்று ஊக்கம் தரும் தோழர் பாலபாரதி, எப்போதும் மலர்ச்சியான முகத்தோடு வாசிக்க நூல்களை தரும் குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என்.எஸ்., தொடக்கத்திலிருந்து எனது நூல்களை தங்களது வலைத்தளத்தில் பதிவிட்டு ஊக்கம் தரும் கணியம் சீனிவாசன், ப்ரீதமிழ் இபுக்ஸ் குழுவினருக்கும் எனது அன்பு.

கிண்டில் கணக்கு தொடங்கி வாசியுங்கள். நன்றி!. 


 



கருத்துகள்