இஸ்ரோவால் இத்துறையில் பெருகும் தேவையை தீர்க்க முடியாது! - கே.சிவன்













Spaceman, Spaceship, Space, Astronaut, Rocket, Moon
பிக்ஸாபே



இஸ்ரோ மட்டும் ஆதிக்கம் செலுத்திவந்த விண்வெளித்துறையில் இனி தனியார் நிறுவனங்களும் பீடு நடை போடப்போகின்றன. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தங்களை இன்ஸ்பேஸ் என்ற நிறுவனம் கவனிக்கவிருக்கிறது. விண்வெளித்துறையின் செயலரும், இஸ்ரோ அமைப்பின் தலைவருமான கே.சிவனிடம் பேசினோம்.

இன் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினால் இஸ்ரோ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாதா?

அந்த அமைப்பு தனியார் அமைப்புகள் இஸ்ரோவுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை கவனிக்கும். இதற்கென தனி இயக்குநர், குழு உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பை தன்னிச்சையாக இயங்கும் அதிகாரத்தைக்கொண்டது.

சந்திராயன் 3 திட்டம் என்னவானது?

இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். நாங்கள்முன்னர் அனுப்பிய ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளதால், அடுத்து அனுப்பவிருக்கும் விண்கலனில் ஆர்பிட்டர் இருக்காது. லேண்டர், ரோவர் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

2022இல் விண்வெளி வீரர்களை விண்கலனில் அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? பெருந்தொற்று காரணமாக ரஷ்யாவில் வீரர்களுக்கு கிடைத்த பயிற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது?

பிரதமர் 75 ஆவது குடியரசு தினத்தில் இந்தியா, விண்கலனில் வீரர்களை அனுப்பி வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். நாங்கள் டிசம்பரில் 2021இல் வீரர்களை அனுப்பி வைக்க உள்ளோம். ரஷ்யாவில் 15 மாத பயிற்சி என்பது பெருந்தொற்று காரணமாக தடைபட்டுள்ளது உண்மைதான். ஆனால் அதற்காக நாங்கள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் என்பது தள்ளிவைக்கப்படாது. வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இரண்டு திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றில் ஒன்றை இறுதி செய்து அடுத்த ஆண்டு அவர்களை விண்வெளிக்கு அனுப்புவது உறுதி.

இந்த ஆண்டு செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டம் இருக்கிறதா?

பெருந்தொற்று காரணமாக செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் பகுதிப்பொருட்களை பெறமுடியவில்லை. அதிகாரிகளும் பணியாற்றுவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. அனுப்பவேண்டிய செயற்கைக்கோள் பணிகள் வரிசையாக உள்ளன. 5 செயற்கைக்கோள்களை அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தகவல்தொடர்பு மற்றும் மக்களைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களும் அடக்கம்.

விண்வெளித்துறையில் அரசு அமல்படுத்தியுள்ள சீர்திருத்தங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

சரியான நேரத்தில் இத்துறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கிறார்கள். 360 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட சந்தையில், இந்தியாவின் பங்கு 3 சதவீதம்தான் உள்ளது. இத்துறையில் உள்ள பல்வேறு தேவைகளை இஸ்ரோ மட்டும் தனியாக தீர்க்க முடியாது. பிரதமர் மோடியின் தனியாரும் பங்களிக்கலாம் என்ற சீர்திருத்த முடிவால், பல்வேறு தேவைகள் பூர்த்தியாகும் வாய்ப்பு உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா

சுரேந்திர சிங்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்