மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிவது இயல்பானது!








Working Out GIF by sheepfilms






பாலின் ரஸ்ஸல், டிமிதார் இன்செவ், கோவொர்க்ஸ்

இங்கு கலிஃபோர்னியாவில் கோவொர்க்கிங் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறப்பட்டு வருகிறதே?

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நாங்கள் தங்கியிருந்தோம். இங்கு மார்ச் மாதம் முதலே தீவிரமான கட்டுப்பாடுகள் அமலாகத் தொடங்கின. கோவொர்க்கிங் இடங்களை இவர்கள் பிறர் அதிகம் வராதபடி மாற்றினர். இதனால் அந்த இடங்கள் மூடப்பட்ட இடங்களுக்குள் செயல்பட்டு வந்தன. பிறர் இங்கு செல்வது பெருமளவு தடுக்கப்பட்டுவிட்டது.  காரணம், நோய்த்தொற்றுக்கு எதிரான பொதுமுடக்கம்தான்.

இத்துறையில் உள்ள சவால்கள் என்னென்ன?

பொதுமுடக்க காலத்தில் கோவொர்க்கிங் நிறுவனங்கள் ஏறத்தாழ மூடப்பட்டு விட்டன. எடுத்துக்கொண்ட திட்டங்களை இவர்கள் தள்ளி வைத்துவிட்டு இருக்கின்றனர். நேரடியாக அலுவலகமாக திறந்து இயங்குவது கடினமாகி உள்ளது. இதில் வேலைபார்ப்பவர்கள் நேரத்திற்கு ஏற்ப சிறுதொகையை கொடுத்தால் போதும்.

இத்துறை சார்ந்த நிகழ்ச்சியை லண்டனில் நடத்தினீர்கள் அல்லவா?

ஆமாம். அப்போதுதான் பலருக்கும் நிறுவனம் பற்றி தெரியவரும் என்பதற்காக இந்த முயற்சி. பதினெட்டு குழுக்களாக பிரிந்துகொண்டு பணியாற்றினோம். எங்களது வணிக திட்டத்தை நாங்கள் இப்போது இணையத்திற்கு மாற்றிவிட்டோம். இதன் மூலம் இந்தியா, இங்கிலாந்து, பல்கேரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகிறோம்.

பெருந்தொற்று பாதிப்பு முடிந்தபிறகு இணைந்து பணிபுரியும் அலுவலகங்களை அமைப்பீர்களா?

மனிதர்களின் இயல்பே, பிறருடன் கலந்து பழகி பணிபுரிவதுதான். அதில் பெருந்தொற்று காரணமாக சில விதிகளை கடைபிடிக்கவேண்டியதிருக்கிறது. அவ்வளவுதான. அதற்கேற்ப அனைவரும் பணிபுரியும் இடங்களை நாங்கள் உருவாக்குவோம்.

இங்கு என்ன பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கப்போகிறீர்கள்?

ஐந்து முதல் இருபது பேர் இணைந்து பணியாற்றக்கூடிய அலுவலக இடங்களை அமைக்கவிருக்கிறோம். இதில் கிருமிநாசினியைப் பயன்படுத்துவதோடு, உடலின் வெப்பநிலையை கணிப்பதும் முக்கியமானது. இத்தாலி, ரோம் ஆகிய பகுதிகளில் நாங்கள் இதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டோம்.

உங்கள் வலைத்தளத்தில் நியூ ஸ்கூல் வொர்க் கம்யூனிட்டி என்ற வார்த்தையைப் பார்த்தேன். இதற்கு என்ன அர்த்தம்?

மனிதர்கள் அனைவரும் இணைந்து பணிபுரிவது என்ற செயல்பாட்டை கோ வொர்க்கிங் என்று குறிப்பிடுகிறோம். இதனை இடம் சார்ந்த குறிப்பிடுவதல்ல. இப்போது இணையம் சார்ந்த அனைவரும் விர்ச்சுவல் முறையில் பணிபுரிகிறார்கள்.

பிசிமேக்.காம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்