சிறுகுறு தொழிலகங்களை வலுவாக்கினால்தான் தற்சார்பு இந்தியா நிஜமாகும்! - ரவி வெங்கடேசன்
ஜிபி |
ரவி வெங்கடேசன்
தொழில்துறை வல்லுநர்
சிறுகுறு தொழில்கள் பற்றிய
அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து உள்ளீர்கள். இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தியாவில் 60 மில்லியன்
(1 மில்லியன் – 10 லட்சம்) தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 110 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களின் உழைப்பில்தான் நாட்டின் உற்பத்தி 25 சதவீதம் உருவாகிறது. பெரும் தொழில்நிறுவனங்கள்
சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்றி இயங்க முடியாது. தொழில்துறையின் முதுகெலும்பாக
சிறு குறு தொழிலகங்கள் விளங்குகின்றன. பெருந்தொற்று காரணமாக இத்துறையில் நிறைய பிரச்னைகள்
ஏற்பட்டுள்ளன. நம்மிடமுள்ள 20 ஆயிரம் நிறுவனங்கள் பத்துகோடி முதலீடு கொண்டவையே. மேலும்
இவற்றில் பத்துபேர்களுக்கும் குறைவான பணியாட்களைக் கொண்ட நிறுவனங்கள் 98 சதவீதமாக உள்ளன.
இதனால் நாம் இந்த நிறுவனங்களை முறைப்படுத்தி மேம்படுத்தாமல் தற்சார்பு இந்தியா என்று
பேசுவது தவறானது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதும் கடினமானது.
சீனாவை எதிர்கொள்ள முடியாது
என்று எப்படி கூறுகிறீர்கள். விளக்கமாக கூறுங்களேன்.
இந்தியாவில் நடைபெறும் விழாக்களுக்கான
விநாயகர் சிலைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், தகவல்தொடர்பு சாதனங்கள், செல்போன்கள்,
5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் என அனைத்துமே எப்படி சீன பொருட்களாக உள்ளன? காரணம், அங்கு
அரசு வலியுறுத்தாமல் அங்குள்ள தொழில்நிறுவனங்கள் வளர்வதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ளன.
இதனால்தான் அவர்களது சந்தை தெற்காசிய ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வளர்ச்சி பெற்று
வருகிறது.
சீன நிறுவனங்கள் தயாரிக்கும்
தட்டையான வடிவம் கொண்ட டிவி திரைகளை நாம் இன்னும் தயாரிக்கவில்லை. நமது நாட்டில் தொழில்களை
தொடங்கி நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதுதான் இதற்கு காரணம். நாட்டின் பொருளாதாரத்தை
உயர்த்துவதற்கு சிறு குறு தொழிலகங்கள் வளருவது முக்கியம். அப்போதுதான் பெரிய நிறுவனங்கள்,
பன்னாட்டு நிறுவனங்கள் வளர முடியம். பிரதமர் தற்சார்பை வலியுறுத்தினாலும் இங்கு சூழ்நிலை
கடினமாக இருக்கிறது.
சிறுகுறு தொழிலகங்களுக்கு
சரியானபடி கவனம் குவிக்கவில்லை என்கிறீர்களா?
நான் அப்படி நினைக்கவில்லை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி க்கு பிறகு நடந்த பெரிய அதிர்ச்சி கோவிட் 19 விவகாரம்தான்.
இந்த பிரச்னைகளால் 40 சதவீத சிறு குறு தொழிலகங்கள் அழிந்துவிட்டன. அண்மையில் நடத்தப்பட்ட
ஆய்வில் 57 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு, செயல்பாடுகளுக்கும் வழங்க கூட நிதியின்றி
தடுமாறி வருவது தெரிய வந்துள்ளது. இவை பலவும் முறைப்படுத்தாத பிரிவில் உள்ளன. இவற்றை
முறைப்படுத்த பல்வேறு மாநிலங்களில் 58 ஆயிரம் விதிமுறைகளை நாம் ஏற்று நடக்கவேண்டியுள்ளது.
இப்போதுள்ள நிலையில் தொழிலகங்களை வேகமாக உற்பத்தி திறன் கொண்டதாக மாற்றி உயிர்கொடுக்கவேண்டும்.
தொழில்துறையை மீட்பதற்கான
ஆய்வில் நீங்கள் என்னென்ன விஷயங்களை அடையாளம் கண்டுள்ளீர்கள்?
குர்கான் அல்லது பெங்களூரு
போன்ற நகரங்களைப் போல தொழில் செய்வதற்கான விதிகள்
எளிமைப்படுத்தப் படவேண்டும். அப்போதான் தொழிலகங்களை எளிமையாக தொடங்கி, சிறப்பாக அதனை
நடத்த முடியும். அனைத்து தொழில் அனுமதிகளையும் டிஜிட்டல் முறையில் அரசு மாற்ற வேண்டும்.
தொழிலகங்களுக்கு தேவையான நிலங்களை மத்திய மாநில அரசுகள் நிலவங்கி தொடங்கி அதன் மூலம்
பெற்றுக்கொடுப்பது சிறப்பாக இருக்கும். டெஸ்லா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பஞ்சாப்
மாநிலத்திற்கு வந்து எளிதாக தொழில் தொடங்கினால் கூட அதற்கான வாய்ப்புகளை உருவாக்கினால்
இந்நிகழ்வு சாத்தியம்.
நிலம் கையகப்படுத்துவது கடினமான செயலாக இருக்கிறதா?
ஆம். மாநில அரசு அரசியல்
விஷயங்களில் ஈடுபடாமல் தொழில் சார்ந்து யோசித்தால் இதில் பிரச்னைகள் வராது. கர்நாடகம்,
உத்தர்காண்ட், மேகாலயா ஆகிய மாநிலங்கள் நிலங்களை தொழிற்சாலைகளுக்கு வழங்க தயாராக உள்ளனர்.
வேலைகள் உருவாக்குவது பற்றி சொன்னீர்கள்?
சீனா, கடந்த ஆண்டில் பத்து
மில்லியன் வேலைவாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கி அளித்துள்ளது. நாம் இதுபோன்ற இலக்கை
வைத்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். நமது மக்கள்தொகையில்
பாதிப்பேருக்கும் குறைவாகவே இங்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இது கோவிட் -19 பிரச்னைக்கு
பிறகு வேலையின்மையை அதிகம் ஏற்படுத்தியுள்ளன.
பணியாளர்களுக்கான பாதுகாப்பு, சம்பளம், உற்பத்தி திறன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியா இப்போது குறைந்த
உற்பத்தி திறன், குறைந்த ஊதியம் என்ற வலைக்குள் சிக்கியுள்ளது. இது மாறவேண்டும். நிறுவன
இயக்குநர்கள், தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, சரியான ஊதியம் ஆகியவற்றை வழங்காதபோது
உற்பத்தித் திறன் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
லிவ் மின்ட்
பிரசாந்த் கே நந்தா
கருத்துகள்
கருத்துரையிடுக