சினிமாவில் நடக்கும் மாற்றங்களை நான் ஏற்றுகொள்கிறேன்! - அமிதாப் பச்சன்








விடாக்கண்டன் அமிதாப், கொடாக்கண்டன் ...
விகடன்


அமிதாப் பச்சன், இந்தி திரைப்பட நடிகர்

குலாப் சித்தாபோ படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

இயக்குநர் சூஜித் சிர்கார். அவர்தான் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரமாக என்னை ஈர்த்தார்.

அவருடன் முன்பே நீங்கள் வேலை செய்து இருக்கிறீர்கள் அல்லவா?

சூஜித் தன்னுடைய கதாபாத்திரம், அதன் முடிவுகள் பற்றிய தீவிரமான தன்மையைக் கொண்டிருப்பார். நீங்கள் அவரிடம் உங்கள் பார்வை, கருத்துகள் ஆகியவற்றை கூறினாலும் கூட அவர் கொண்டிருக்கும் கருத்து அடிப்படையில் அதுவே முதன்மை பெறும். கதாபாத்திரங்கள் மீது அவருக்கு உள்ள காதல்தான் அவரது படத்தை பேசவைக்கிறது.

ஆயுஷ்மான் குரானாவோடு பணியாற்றிய அனுபவத்தை சொல்லுங்கள்.

அவர் திறமையான நடிகர்.

நீங்கள் பல்லாண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். டிஜிட்டல் கேமரா, நேரடியான ஒலிப்பதிவு என பல்வேறு மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் திரைத்துறையில் 51 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த மாற்றங்களை ஏற்காவிட்டால் நான் இத்துறையில் இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றியிருக்க முடியாது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


கருத்துகள்