இந்தியா எல்லை விவகாரத்தில் வேகமாக முடிவெடுக்க வேண்டிய நேரமிது! - வேத் பிரகாஷ் மாலிக்






Comedy Central GIF by Lights Out with David Spade
ஜிபி












மொழிபெயர்ப்பு நேர்காணல்

வேத் பிரகாஷ் மாலிக், முன்னாள் ராணுவப்பிரிவு தலைவர்.

1999இல் பாகிஸ்தான் கார்க்கில் பகுதிக்குள் நுழைந்த நிகழ்ச்சிக்கும், சீனா இப்போது உள்ளே நுழையும் நிகழ்ச்சிக்கும் தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா?

இல்லை. பாகிஸ்தான் முன்னர் கார்க்கிலில் உள்ளே வர முயன்றபோது அதன் கருத்தியலும் அதற்கான திட்டமும் பெரிய உள்நோக்கத்தை கொண்டிருந்தது. லடாக்கில் சீனாவின் அத்துமீறலை நாம் அப்படி எடுத்துக்கொள்ளமுடியாது. சீனாவுடன் ராஜரீக உறவு, பேச்சுவார்த்தை என்று செயல்படும் இந்தியாவில் அந்நாடு அத்துமீறும் செயல்பாடு ஆபத்தான போக்கு.

இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்?

ராணுவப்படைகள் சீனாவின் அத்துமீறலைத் தடுக்க எல்லையில் தயாராக இருக்கவேண்டும். இத்தோடு அரசியல்ரீதியான முடிவுகளை எட்டுவதற்கான செயல்பாடுகளிலும் இறங்கவேண்டும்.

பாகிஸ்தான் இந்தியா எல்லைப்பிரச்னை இனி எப்படி பார்க்கப்படும்?

பாகிஸ்தான் தனது நாட்டிலுள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து எப்போதும் போல எல்லையில் அத்துமீறல்களை நடத்த வாய்ப்புள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தடுக்க தயாராகவே உள்ளது.

அத்துமீறல்களைத் தடுக்க என்னென்ன முயற்சிகளை செய்துள்ளோம்?

எல்லையில் பாதுகாப்பு நிலவ பல்வேறு மாநாடுகள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் சீனா எல்லையில் தொடர்ந்து நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் வீர ர்களை தாக்கி வன்முறையிலும் இறங்கி வருகிறது. இதைத் தடுக்க நாம் அங்கு அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி ராணுவம் செயல்படுவதற்கு உதவ வேண்டும்.

 

சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா சரியான முறையில் எதிர்வினை ஆற்றியுள்ளதா?

லடாக், டோக்லாம், டெம்சோக், டெம்சங், சுமார் ஆகிய பகுதிகளில் அத்துமீறல்கள் நடந்துள்ளன. ராணுவப்படைகள் அங்கு தாக்குதல்கள் நடத்துவதை இந்திய அரசு விரும்பவில்லை. பெரும்பாலும் அமைதிப்பேச்சுவார்த்தை காரணமாக ராணுவம் அத்துமீறல்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தவில்லை. தற்போது சீனா நடத்தியுள்ள தாக்குதலில் இந்திய வீர ர்கள் பலியாகியுள்ளனர். இது இனிமேல் நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், இரு நாட்டு உறவுகள் என அனைத்தையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ்

ரமேஷ் வினாயக்

 


கருத்துகள்