வங்கி மோசடியில் சிக்கி வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள ஓடும் இளைஞன்! ஜருகண்டி







Jarugandi on Moviebuff.com

ஜருகண்டி

இயக்கம்: ஏ.என். பிச்சுமணி

இசை: போபோ சஷி

ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர்


வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் சொத்துக்களை பிறரின் சொத்துக்களாக கணக்கு காட்டி வங்கியில் லோன் பெற்றுத்தருகிறது  ஒரு சமூக விரோத கும்பல். இவர்களின் பிடியில் ஜெய்யும் அவரது நண்பரும் சிக்குகிறார்கள். லோன் வாங்கிக்கொடுத்து அதற்கான கமிஷனையும கொடுத்துவிட்டு ஜில் ஜில் டிராவல்ஸ் தொடங்குகிறார் ஜெய். கடன் வாங்கிக்கொடுத்த அவரது நண்பருக்கு நான்கு நாட்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நடந்த திருட்டுத்தனம் தெரியும். எனக்கு பத்து லட்சம் ஷேர் கொடுத்தால் மூச் காட்டமாட்டேன். இல்லைன்னா, இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையை அழிச்சிடுவேன் என மிரட்டுகிறார். 

இதற்கான பணம் தேடி அலையும்போது, இளம்பெண் ஒருவரை ரோபோ சங்கர் கடத்தி கொண்டு வந்தால் பணம் தருவதாக சொல்கிறார். இதை நம்பி ஜெய்யும் அவரது நண்பரும் அப்பெண்ணை கடத்த, விவகாரம் பெரிதாகிறது. அந்த பெண் திடீரென பத்து லட்சரூபாய் படத்துடன் எஸ் ஸாக ஜெய்க்கு பிபி எகிறுகிறது. யார் அந்த பெண், அவரை எதற்காக ரோபோ சங்கர் கடத்த சொல்லுகிறார், இன்ஸ்பெக்டருக்கு சொன்னபடி பணத்தை கொடுக்க முடிந்ததா  என்பதுதான் படம். 

ஆஹா

ஜெய்யை குறைவாக பேச வைத்திருக்கிறார்கள். இதனால் படம் பரவாயில்லை என்று சொல்லலாம். படம் முழுக்க ரோபோசங்கரின் காமெடியால்தான் காப்பாற்றப்படுகிறோம். மற்றபடி படத்தின் நாயகிக்கு பெரிய வேலையில்லை. போபோ சஷியின் பாடலுக்கு பயன்பட்டிருக்கிறார். எடுத்துக்கொண்ட வங்கி கடன் விவகாரம், ஆஸரம பெண்கள் பாலியலுக்கு பயன்படுத்துவது ஆகிய விவகாரங்கள் படத்தை கவனிக்க வைக்கின்றன. 

ஐயையோ 

படத்தில் உள்ள பல்வேறு லாஜிக் ஓட்டைகளை மறந்தால் மட்டுமே படத்தை ரசிக்க முடியும். படத்தில் ஃபேன்டசி தன்மை தூக்கலாக இருப்பதால் நீங்கள் எப்படிப்பா இப்படியெல்லாம் நடக்கும் என யோசிக்காமல் படம் பார்த்தால்தான் படத்தை ரசிக்க முடியும். 

காமெடி ரூட்

கோமாளிமேடை 

கருத்துகள்